ஹோம் /ராமநாதபுரம் /

ரூ.1கோடி செலவில் கட்டப்பட்ட மீன் மார்க்கெட் கட்டடம்.. 2 மாதத்திலே உடைந்து விழும் அபாயம் - பொதுமக்கள் வேதனை

ரூ.1கோடி செலவில் கட்டப்பட்ட மீன் மார்க்கெட் கட்டடம்.. 2 மாதத்திலே உடைந்து விழும் அபாயம் - பொதுமக்கள் வேதனை

X
சேதமடைந்த

சேதமடைந்த நிலையில் மீன் மார்க்கெட்

ராமேஸ்வரத்தில் திறந்து இரண்டே மாதங்கள் மட்டுமே ஆன மீன் மார்க்கெட் கட்டிடம் இடிந்து விழுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சி சார்பில் இயங்கி வந்த பழைய மீன் மார்க்கெட் கட்டிடமானது உடைந்து விழும் நிலையில் இருந்ததால் அதிமுக ஆட்சியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது‌. இதன் பிறகு புதிய மீன் மார்க்கெட் கட்டிடம் அமைப்பதற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டது. இரண்டு வருடங்களாக கட்டப்பட்டு வந்து கடந்த அக்டோபர் மாதம் 14-ம் தேதி நகராட்சி நிர்வாகம் சார்பில் திறக்கப்பட்டது.

சிறிய கூடைக்கு பத்து ரூபாயும் பெரிய கூடைக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. உள்ளூர் பொதுமக்கள் விசைப்படகு மூலம் பிடிக்கப்படும் ஆழ்கடல் மீன்களை விட, கரைவலையில் பிடிக்கப்படும் மீன்களில் மட்டுமே அதிக பிரியம் கொண்டு வாங்கி சமைத்து உண்பார்கள். இந்த கரைவலை மீன்கள் கரையூர், முகுந்தராய சத்திரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் மீனவர்கள் பிடித்து கொண்டு வந்து மீன் மார்க்கெட்டில் விற்பனை செய்வார்கள்.

மீனவர்கள் மீன்களை விற்பனை செய்யும்போது சில நேரங்களில் மீன்கள் உயிருடன் இருப்பதை காணமுடியும். இவ்வாறு வரும் கரைவலை மீன்களை புதிதாக திறக்கப்பட்ட மீன் மார்க்கெட்டில் வைத்து விற்பனை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க : மதுரையில் வரும் மியாவாக்கி காடுகள்.. பச்சை பசுமையாக மாறவுள்ள நகரம்!

இந்நிலையில், திறக்கப்பட்ட அன்றே மீன் மார்க்கெடின் மேல் சுவற்றில் இருந்து மேல்தளத்தில் தேங்கிய மழைநீர் வடியத்தொடங்கி உள்ளது. தற்போது மழை பெய்ய தொடங்கிய உடன் சிறிது சிறிதாக பெயர்ந்து விழத் தொடங்கி உள்ளது.பொதுமக்கள், மீனவ பெண் வியாபாரிகள் அதிகளவில் இங்கு இருப்பதால் மேற்கூரை மற்றும் பக்க சுவர்கள் இடிந்து விழுந்து எதுவும் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

மேலும்,சேதமடைந்த சுவர்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர்.மேலும் தரமற்ற கட்டிடத்தை கட்டியவர்கள் மீதும் உறுதுணையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன் விற்கும் பெண் வியாபாரிகள் கூறுகின்றனர்.

First published:

Tags: Fish, Local News, Ramanathapuram, Rameshwaram, Tamil News