முகப்பு /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம்-மதுரை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

ராமேஸ்வரம்-மதுரை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

சிறப்பு ரயில்

சிறப்பு ரயில்

Ramanathapuram District | ராமநாதபுரத்தில் இருந்து செல்லும், ராமேஸ்வரம்-மதுரை சிறப்பு ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரத்தில் இருந்து செல்லும், ராமேஸ்வரம்-மதுரை சிறப்பு ரயில், பிப்ரவரி 1 முதல் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவை இணைக்க கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ளது புகழ்பெற்ற பாம்பன் ரயில் பாலம். இந்த பாலத்தில் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி இரவு ராமேஸ்வரத்திற்கு பயணிகளுடன் ரயில் ஒன்று வரும்போது தூக்குப்பாலத்தில் லேசான அதிர்வுகள் ஏற்பட்டன. இது பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் மூலம் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து பாம்பன் ரயில் பாலத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் மதுரை மற்றும் திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நேக்கி வரும் பயணிகள் ரயில்கள் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றனது. சென்னையில் இருந்து வரும் இரண்டு ரயில்கள் மட்டும் மண்டபம் வரை இயக்கப்படுகின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதற்கிடையில், பாம்பன் ரயில் பாலத்தில் மறு அறிவிப்பு வரும் வரை ரயில் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இதனால், ராமேஸ்வரம்-மதுரை ரயில்கள் ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில், 2023 பிப்ரவரி 1ஆம் தேதி ஆதல் 28ஆம் தேதி வரை வியாழக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரம்-மதுரை சிறப்பு ரயில் (06654) ராமேஸ்வரத்தில் இருந்து தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : சிலிர்ப்பூட்டும் சின்னக் கல்லாறு அருவி... ஒரு என்ஜாய் ட்ரிப் போகலாம்!

அதன்படி, இந்த ரயில் ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 60 நிமிடங்கள் காலதாமதமாக மதியம் 01.05 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Ramanathapuram, Train