முகப்பு /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் லெட்சுமணர் தீர்த்தத்தில் விமர்சையாக நடைபெற்ற தெப்பத்தேர் திருவிழா

ராமேஸ்வரத்தில் லெட்சுமணர் தீர்த்தத்தில் விமர்சையாக நடைபெற்ற தெப்பத்தேர் திருவிழா

X
ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் தெப்பம் திருவிழா

Ramanathapuram | தைப்பூசத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் லட்சுமணத் தீர்த்தத்தில் தெப்பத்தேர் திருவிழா, வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

தைப்பூசத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் லட்சுமணத் தீர்த்தத்தில் தெப்பத்தேர் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து அரோகரா முழக்கமிட தெப்பத் தேர் 11 முறை சுற்றி வந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலில் தைப்பூச தெப்பத் திருவிழா உற்சவம்  திருக்கோவிலின் உபகோவிலான அருள்மிகு லெட்சுமணேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் நடைபெற்றது.

தைமாதம் பௌர்ணமி நாளில் உலகில் நீரும், நிலமும் சேர்ந்து பிறந்தது இந்நாள்தான் என்று ஜதீகம் உள்ளது. மேலும், சக்தியிடம் இருந்து முருகன் வேலை பெற்ற நாளும் என்று கூறப்படுகிறது. இந்நாளில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் நாம் நினைப்பது நிறைவேறும். இதனால் தைபூசம் ஒவ்வொரு வருடமும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

தெப்பத் தேரில் திருவுருவச் சிலை

இந்நிலையில், தைபூசத்தை முன்னிட்டு ராமநாதசுவாமி திருக்கோவில் அதிகாலையில் 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு ஆறுகால பூஜை நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து காலை 10:30 மணி அளவில் கோவில் நடை சாத்தப்பட்டு ராமநாதசுவாமி - பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி லட்சுமணர் தீர்த்தம் குளத்திற்கு வந்தடைந்தனர்.

தெப்பத் தேர்

இதனைத் தொடர்ந்து, ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் 7 மணி அளவில் எழுந்தருளி தெப்பக்குளத்தில் 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பின் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றது.

தைப்பூசத் திருநாளில் முருகனை தரிசித்து வேண்டியது நடைபெறும் என்பதால் தெப்பத் தேர் சுற்றுவதைக்காண ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான உள்ளுர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், வெளிமாவட்ட வெளி மாநில பக்தர்கள் ஏராளமானேர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram