முகப்பு /ராமநாதபுரம் /

Ramanathapuram Weather Update : ராமேஸ்வரத்தில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழை.. சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்.. 

Ramanathapuram Weather Update : ராமேஸ்வரத்தில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழை.. சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்.. 

X
ராமேஸ்வரத்தில்

ராமேஸ்வரத்தில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழை

Ramanathapuram Weather Update : ராமேஸ்வரத்தில் இரவு முழுவதும் தொடர்ச்சியாக இடியுடன் கூடிய கனமழையானது பெய்ததால், ராமநாதசுவாமி திருக்கோவில் வசந்த உற்சவத்தின்போது தேங்கிய மழைநீரால் பக்தர்கள் அவதியடைந்தனர்.

  • Last Updated :
  • Rameswaram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இரவு முழுவதும் தொடர்ச்சியாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கியதிலிருந்து நாள்தோறும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வெளியில் சென்றால் வெப்பச்சலனமாக இருந்ததால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வெளியில் செல்லாமல் வீட்டிலயே இருந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவுறுத்தியிருந்தது. மேலும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவிப்பு விடுத்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தாலும் ராமேஸ்வரம் தீவு பகுதியில் அவ்வப்போது மிதமான சாரல் மழையே பெய்து வந்தது‌. இதையடுத்து, நேற்று இரவு 8:25 மணிக்கு தொடங்கிய மழையானது ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன், தங்கச்சிமடம், அக்காள் மடம் வரையிலும் இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழையானது பெய்து வந்தது.

ராமேஸ்வரத்தில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழை

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், சாலையில் மழைநீர் பள்ளமான பகுதிகளில் ஆங்காங்கே குளம் போல் தேங்கியும், கடலில் கலந்தது,இதையடுத்து, ராமநாதசுவாமி திருக்கோவில் கிழக்கு கோபுர வாசல் பகுதியிலும் , கோவிலின் உட்புறத்திலும் மழைநீர் தேங்கியதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

    First published:

    Tags: Local News, Ramanathapuram, Rameshwaram, Weather News in Tamil