ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம் - ஹூப்ளி  சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.!

ராமேஸ்வரம் - ஹூப்ளி  சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.!

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Rameswaram-Hubli Special Train Extension- Tourists Rejoice |ராமேஸ்வரம்- ஹூப்ளி இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தர்மபுரி, ஓமலூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை பகுதிகளில் ரயில் நின்று செல்லும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரம் - ஹூப்ளி இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தர்மபுரி, ஓமலூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை பகுதிகளில் ரயில் நின்று செல்லும்.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் செய்தி குறிப்பும் வெளியிட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க ; இன்னும் வரி செலுத்தவில்லையா? - ராமநாதபுரம் மக்களுக்கு எச்சரிக்கை

அதன்படி ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் (07355) ஹூப்ளியில் இருந்து அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சனிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (07356) ராமேஸ்வரத்தில் இருந்து அக்டோபர் 2ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.25 மணிக்கு ஹூப்ளி சென்று சேரும்.

இதையும் படிங்க ; ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விதைகளை வறட்சியில் இருந்து பாதுகாப்பது எப்படி?

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன 2 அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன 3 அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

இந்த ரயில்கள் ஹவேரி, ராணி பென்னுரு, ஹரிஹார், தேவனஹரி, சிக் ஜாஜுர், பிரூர் அரிசிகரே, தும்கூர், எஸ்வந்த்பூர் (பெங்களூரு), பனஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, ஓமலூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram