ஹோம் /ராமநாதபுரம் /

Ramanathapuram | ரூ.5,000 வரை விலை: உணவகங்களில் கிராக்கி- தடியன் மீனின் சிறப்புகளை விவரிக்கும் மீனவர்கள்

Ramanathapuram | ரூ.5,000 வரை விலை: உணவகங்களில் கிராக்கி- தடியன் மீனின் சிறப்புகளை விவரிக்கும் மீனவர்கள்

தடியன்

தடியன் மீன்

தடியன் என்றழைக்கக்கூடிய மாவுலா மீன் ருசி அதிகம் என்பதால் ஒரு மீன் 5,000 ரூபாய் வரை கூட விலைபோகும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

தடியன் என்றழைக்கக்கூடிய மாவுலா மீனை பற்றி தான் தெரிந்துகொள்ளப் போகிறோம். இந்த மீனானது மிகவும் ருசியானதாக இருக்கும் என்பதால் இந்த மீன் அதிக விலைக்கு விற்பனையாகிறது. இந்த மீன் கூட்டமாக சிக்கினால் அன்று மீனவர்களுக்கு ஜாக்பாட் தான் என்று கூறுகின்றனர் வியாபாரிகள்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு துறைமுகத்திலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அதிகாலையில் மீன் பிடிக்கச் சென்று அடுத்த நாள் அதிகாலையில்தான் மீன் பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் மீன்பிடிக்க சென்று கடை திரும்பிய மீனவர்கள் துறைமுகத்தில் தடியன் என்று அழைக்க கூடிய மாவுலா மீன்கள் ஒவ்வொரு படகிற்கும் 20 முதல் 30 கிலோ வரையிலும் வரத்து கிடைத்துள்ளது. இருந்தபோதிலும் கடந்த மாதத்தை விட இந்த மாதம் விலை குறைவாக இருப்பதால் மீனவர்கள் வருத்தம் அடைந்தனர்.

தடியன் மீன்

இந்த மீன் ஆனது கடந்த மாதம் ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்றது. ஆனால் தற்போது குறைவான ரூபாய்க்கே வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். ஒரு மீன் ஜந்து கிலோவில் இருந்து பத்து கிலோ வரைதான் இருக்கும். இதனால் ஒரு மீன் 2,000 முதல் 5,000 ரூபாய் வரையிலும் விற்க்கப்படுகிறது.

தடியன் மீன்

ஒரு மீன் 5,000 ரூபாய் வரையும் செல்வதால் கூட்டமாக இந்த மீன் மீனவர்களின் வலையில் சிக்கினால் அன்று மீனவர்களுக்கு ஜாக்பாட் தான் என்று வியாபாரிகள் கூறிகிறார்கள். சுவை மிகுந்த மீனாகவும் உள்ளதால் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு பந்தி உணவுக்கு அதிக அளவு இந்த மீன் தான் வாங்கப்படுகிறது.

தடியன் மீன்

தமிழ்நாட்டின் பரவலாக திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு மார்க்கெட்டிற்கும் உணவகங்களுக்கும் அனுப்பப்படுகிறது. கேரளா மாநிலம் கொச்சிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி எக்ஸ்போர்ட் செய்யப்படுகிறது.

இதற்கு‌ வெள்ள ஓரி, மாவுலா, தடியன், என்று அழைக்கப்படுகிறது. ருசி மிகுந்த மருத்துவ குணம் கொண்ட இந்த மீனில் வைட்டமின் ஏ ஊட்டச்சத்து இருப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

மேலும், சிறிய மீன் தான் அதிக விலைக்கு போகுமாம். எடை அதிகரிக்க அதிகரிக்க விலை குறையுமாம்.‌ தற்போது இந்த மீன் அனைத்து விசைப்படகுகளிலும் சேர்த்து 800 கிலோ வரையிலும் வரத்து வந்துள்ளது.

இவை ஊளி மன்னுலா, கரஊளி இனத்தைச் சார்ந்தவை ஆகும். இவை நீளமாக இருப்பதால் ராட்சத மீன் என்றும் கூறப்படுகிறது, பருத்த உடல் பருமன் கொண்டிருப்பதால் தடியன் என்றும் கூறப்படுகிறது.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram