ஹோம் /ராமநாதபுரம் /

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 3 நாள் வேலைநிறுத்தம்.. 

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 3 நாள் வேலைநிறுத்தம்.. 

ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவர்கள்

Rameshwaram Fishermen Strike | இலங்கை கடற்படையினரின்   கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் அவரச ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram | Ramanathapuram

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து மீனவர்கள் மூன்று நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முந்தினம் மீன்பிடிக்க சென்ற மைக்கேல்ராஜ் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகையும், அதில் இருந்த 7 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரின்   கைது நடவடிக்கையை கண்டித்து மீனவ சங்க தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் அவரச ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விசைப்படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி மூன்று நாட்கள் அடையாள வேலை நிறுத்தமும், மேலும் வரும் சனிக்கிழமை மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க:  காந்தளூர் அருவி முதல் அமராவதி அணை வரை.. உடுமலையை சுற்றி மட்டும் இத்தனை சுற்றுலா தலங்களா?

மேலும் இலங்கை கடற்படையால் 2018 முதல் 2022 வரை சிறைபிடிக்கப்பட்ட விசைப்படைகளை விடுதலை செய்யவும், சிறைப்பட்டு இலங்கையில் மூழ்கிய படகுகளுக்கு 5 லட்சம் வழங்கியதில் விடுபட்ட படகுகளுக்கும் நிதி வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த மூன்று நாள் வேலை நிறுத்ததினால் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிற்கின்றன, இதனால் 10,000த்தும் மேற்பட்ட மீனவர்கள் நேரடியாக வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது

Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram