ராமேஸ்வரத்தில் ஆபத்தை உணராமல் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வதால் விபத்து ஏற்படுகிறது என்று பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த மாதம் கார்த்திகை மாதம் என்பதால் தென்மாநிலங்களில் உள்ள பக்தர்கள் ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து கேரளா மாநிலம் பம்பைக்கு சென்று ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்கு முன் புகழ்பெற்ற திருத்தலங்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் செல்வதைவழக்கமாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆன்மீக தலங்களுக்கும் சுற்றுலா தளங்களுக்கும் அதிகளவில் ஐயப்ப பக்தர்கள் வருகை தந்துள்ளனர். தற்போது வருகை தந்துள்ள ஐயப்ப பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் தரிசனம் செய்து விட்டு சுற்றி பார்க்க தனுஷ்கோடி, பாம்பன், அப்துல்கலாம் தேசிய நினைவகம், ஆகிய பகுதிகளுக்கு ஆட்டோக்களில் செல்கின்றனர்.
ஆட்டோக்களில் செல்லும்போது அளவுக்கு அதிகமாக 10-லிருந்து 15 நபர்கள் வரை ஏறிச்செல்கின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆட்டோவில் 13 நபர்கள் சென்றபோதுஆட்டோ, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி தலைகீழாக கவிழ்ந்து விபத்தானது.
இதையடுத்து, பேருந்தில் தொங்கியபடி செல்வது போல் ஐயப்ப பக்தர்கள் ஆட்டோக்களில் தொங்கியபடி செல்லும் வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி வருகிறது.
தற்போது ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகாரித்துள்ளதால் ராமநாதபுரம் பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஆட்டோக்கள் அதிகளவில் வந்துள்ளது. இவ்வாறு வந்துள்ள சிலரும் இதேபோல் அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.
உள்ளூரில் நீண்ட நாட்களாக ஓடும் ஆட்டோக்களில் குறைந்த அளவே ஆட்களை ஏற்றிச்செல்கின்றனர். வெளியூரில் இருந்து வந்த ஆட்டோக்களும், புதிதாக ஆட்டோ ஓட்டும் இளைஞர்கள் சிலரும் ஆபத்தை உணராமல் ஆட்டோக்களில் அதிகளவில் ஆட்களை ஏற்றுகின்றனர் என்று சில ஆட்டோ ஓட்டுனர்கள் கூறுகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இவ்வாறு அளவுக்கு அதிகமாக ஆட்டோவில் ஆட்களை ஏற்றி செல்லும் நபர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து, விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram