முகப்பு /ராமநாதபுரம் /

வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கி உயிரிழந்த இளைஞர்.. நீதி கேட்டு ராமேஸ்வரத்தில் உறவினர்கள் சாலை மறியல்..

வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கி உயிரிழந்த இளைஞர்.. நீதி கேட்டு ராமேஸ்வரத்தில் உறவினர்கள் சாலை மறியல்..

X
ராமேஸ்வரத்தில்

ராமேஸ்வரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

Ramanathapuram District News | ராமேஸ்வரத்தில் திருவிழாவின்போது இளைஞர் ஒருவரை வழிப்பறி கும்பல் பாட்டில் கொண்டு தாக்கியதில் உயிரிந்ததால் கோபமடைந்த உறவினர்கள் நீதிகேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த முகேஷ் என்ற இளைஞரை வழிப்பறி கொள்ளையர்கள் பாட்டில் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்பு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யவேண்டும், இறந்த இளைஞனின் மனைவிக்கு அரசு வேலை வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இறந்த இளைஞனின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதையடுத்து, ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை மற்றும் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் அனைத்திற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து போராட்டமானது வாபஸ் பெறப்பட்டது. உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அனைவரும் பின்னர் கலைந்து சென்றனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram