Home /ramanathapuram /

பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மீனவ பெண்ணுக்கு நீதி வேண்டி ராமேஸ்வரத்தில் சாலை மறியல்!

பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மீனவ பெண்ணுக்கு நீதி வேண்டி ராமேஸ்வரத்தில் சாலை மறியல்!

கொலை

கொலை செய்த மீனவ பெண்ணுக்கு நீதி வேண்டி: சாலை மறியல் நிறுத்தப்பட்டது

Ramanathapuram District: கொலை செய்யப்பட்ட மீனவ பெண்ணுக்கு நீதி வேண்டி ராமேஸ்வரத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பிறகு கை விடப்பட்டது..

    கொலை செய்யப்பட்ட மீனவ பெண்ணுக்கு நீதி வேண்டியும் நடைபெற்ற சாலை மறியல் பேச்சுவார்த்தைக்கு பிறகு கை விடப்பட்டது, இறால் பண்ணையும் மூடப்பட்டு சீல் வைத்து அடைக்கப்பட்டது.

    கடற்பாசி எடுக்கச் சென்ற மீனவர் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பின் கொலை செய்த வடமாநில இளைஞர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும், ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் இயங்கி வரும் இறால் பண்னைகளை உடனடியாக மூட வலியுறுத்தியும்  நான்கு மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து வடகாடு மீனவ கிராம பொதுமக்கள் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றது.

    நேற்று காலை வடகாடு பகுதியில் இருந்து மீனவ பெண் ஒருவர் கடற்பாசி எடுப்பதற்காக வடகாடு கடல் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் இயங்கி வரும் தனியார் இறால் பண்ணையில் பணிபுரியும் வடமாநில இளைஞர்கள் சிலர் அப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பின் கொலை செய்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய இறால் பண்ணையில் வேலை செய்யும் 6 வடமாநில இளைஞர்ளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உயிரிழந்த மீனவ பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும், மீனவ பெண் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு உடனடியாக உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும், ராமேஸ்வரம் தீவு பகுதியில் இயங்கிவரும் அனைத்து இறால் பண்னைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மத்திய பேருந்து நிலையம் அருகே மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் காலை 8 மணி முதல் வடகாடு கிராம மக்கள் மற்றும் ராமேஸ்வரம் ஊர் பொதுமக்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடம் ராமநாதபுரம் ஆர்டிஓ, டிஆர்ஓ உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சாலை மறியல் போராட்டத்தை கை விட கோரி பல முறை பேச்சுவாhத்தை நடத்தினர். ஆனால் மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தால் மட்டும்மே போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என தொடர்ந்து சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர்.

    வடகாடு மீனவ கிராம மக்கள் இந்த தொடர் சாலை மறியல் போராட்டம் காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் இருபுறமும் வாகனங்கள் காலை 8 மணிமுதல் அணிவகுத்து நின்றது. இதனால் ராமேஸ்வரம் வந்த சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரத்திற்குள் வர முடியாமல் நீண்ட நேரமாக கடும் வெயிலில் சாலையில் காத்திருந்தனர்.

    இதையடுத்து, போராட்டக்காரர்கள் பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினரிடம் கூறினர் கோரிக்கைகளை விரைவில் தீர்க்கப்படும் என்று கூறி தன் சொந்த நிதியிலிருந்து ரூபாய் இரண்டு லட்சம் பணம் தொகையை இறந்த பெண்ணின் கணவரிடம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் வழங்கினார்.

    இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. உடனடியாக அந்த இறால் பண்ணைக்கும் சீல் வைக்கப்பட்டு அடைக்கப்பட்டது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    First published:

    Tags: Ramanathapuram, Rameshwaram

    அடுத்த செய்தி