Home /ramanathapuram /

கொசுக்கடி தாங்கமுடியல.. கைக்குழந்தைகளுடன் தவிக்கிறோம்.. நோய் பரவும் அச்சத்தில் தங்கச்சிமடம் மக்கள்..

கொசுக்கடி தாங்கமுடியல.. கைக்குழந்தைகளுடன் தவிக்கிறோம்.. நோய் பரவும் அச்சத்தில் தங்கச்சிமடம் மக்கள்..

ராமநாதபுரம்

ராமநாதபுரம் - தங்கச்சிமடம் சாலையில் கழிவுநீர் குளம்..

Ramanathapuram Thangachimadam : ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்த தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட வலசை தெருவில் கழிவு நீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படாமல் கழிவுநீர் குளம் போல தேங்கி நிற்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் வலசை தெருவில் கழிவுநீர் குளம் போல தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் நெருங்கும் சூழலில் காலரா, மலேரியா போன்ற நோய்கள் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்த தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட வலசை தெருவில் கடந்த 5 வருடங்களுக்கு முன் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த கால்வாயில் விடப்படுகிறது.

இந்நிலையில் இந்த கழிவுநீர் கால்வாய் சரியான முறையில் பராமரிக்கப்படாததால், கழிவுநீரானது மேடான பக்கம் செல்ல முடியாமல், பள்ளமான இடங்களில் தேக்கம் அடைந்து கால்வாயில் இருந்து வெளியேறத் தொடங்கி உள்ளது.

ராமநாதபுரம் - தங்கச்சிமடம் வலசை தெரு..


தொடக்கத்திலேயே, இது தொடர்பாக அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்றத்தில் புகார் கொடுக்க தொடங்கியுள்ளனர். இருப்பினும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தூய்மை பணியாளர்களை கொண்டு குப்பைகளை மட்டும் அள்ளி விட்டு கழிவுநீரை வெளியேற்றாமல் அலட்சியமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டுகின்றனர்.

ராமநாதபுரம் - தங்கச்சிமடம் வலசை தெரு..


கடந்த இரண்டு மாதங்களாக கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கும் நிலையில், இதன் வழியாக தான் 30 வீடுகளுக்கு பொதுமக்கள் சென்றுவர வேண்டியுள்ளது. எதிரே தனியார் கிளினிக், திருமண மஹால், முடி திருத்தகம் போன்றவை உள்ளன.

இது தொடர்பாக வலசை தெருமக்கள் கூறுகையில், “ இன்னும் சில வாரங்களில் மழைக்காலம் தொடங்கிவிடும், வீட்டில் கை குழந்தைகள் வைத்துள்ளோம், சென்ற வருடம் தங்கச்சிமடத்தில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் வந்தது, ஒரு குழந்தையும் இறந்தது.

ராமநாதபுரம் - தங்கச்சிமடம் வலசை தெரு..


இப்படிப்பட்ட நிலையில் இவ்வாறு சுகாதாரமற்ற முறையில் வீட்டின் முன்பு கழிவுநீர் இருப்பது எங்களுக்கு அச்சத்தை கொடுக்கிறது. 30 வீட்டு மக்களும் இத மிதச்சிட்டு நடக்குறோம், மற்றும் கொசுவினால் டெங்கு போன்ற நோய்கள் வந்தால் நாங்கள் என்ன செய்வது என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஊராட்சி மன்ற நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து நோய்பரவலை தடுக்க வேண்டும் என்பதே பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி