ஹோம் /ராமநாதபுரம் /

“சீசன் துணிக்கடைகளில் போதிய வியாபாரம் இல்லை..” ராமேஸ்வரத்தில் வியாபாரிகள் வேதனை..

“சீசன் துணிக்கடைகளில் போதிய வியாபாரம் இல்லை..” ராமேஸ்வரத்தில் வியாபாரிகள் வேதனை..

X
ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

Temporary Textile Shops : ராமேஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக கடைகளில் வியாபாரம் சரியாக இல்லையென்று வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் வருடத்தில் 2 மாதங்கள் மட்டுமே அமைக்கப்படும் சீசன் துணிக்கடைகள், 2 வருடங்களுக்கு முன்பு இருந்த விற்பனைபோல் இல்லாமல் , இந்த வருடம் விற்பனை மந்தம் என்று கவலை தெரிவிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே சுமார் 500க்கும்‌ மேற்பட்ட துணிக் கடைகள்அமைக்கப்பட்டுள்ளன. இந்த துணிக்கடைகள் வருடத்தில் 2 மாதங்கள் அதாவது கார்த்திகை, மார்கழி, ஆங்கிலத்தில் ஜனவரி மாதம் வரை மட்டுமே இந்த துணிக் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது. இந்த கடைகளில் கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு வேண்டி மாலை அணிவித்து ஐயப்பனை தரிசித்து விட்டு வரும் ஐயப்ப பக்தர்கள், இந்த கடைகளில் குறைந்த விலையில் துணிகளை வாங்கிதங்கள் குடும்பத்தினர்‌ மற்றும் உறவினர்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

இதனால் இப்பகுதியில் அமைக்கப்படும் கடைகளில் கொரோனாவிற்கு முன்பு அனைவருக்கும் வியாபாரம் அமோகமாக இருக்கும். 20 ஆண்டுகளாக ராமேஸ்வரத்தில் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மதுரை, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இருந்தும் திருப்பூர், சேலத்தில் இருந்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் துணிகள் விற்க்கப்படுகிறது.

மேலும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து வந்துகடைகள் அமைக்கப்படுகின்றன.மத்திய பிரதேசம், பஞ்சாப், பெங்களூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஸ்வெட்டர், ரெயின்கோட் மற்றும் கம்பளி போன்றவை ராமேஸ்வரத்தில் கொண்டு வந்து விற்க்கப்படுகிறது. கடந்த மாதம் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியது என்று தகவல் பரவியதால் அதற்கு முன்பு வந்த கூட்டத்தால் மட்டுமே வியாபாரம் நடந்தது என்றும், அதன் பின் கர்நாடக, ஆந்திரா போன்ற மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து விட்டு இங்கு வரலாமல் திரும்பி சென்றதால் வியாபாரம் நினைத்த அளவிற்கு இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram