Home /ramanathapuram /

ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா ராமருக்கு சிறப்பு பூஜைகளுடன் நிறைவு

ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா ராமருக்கு சிறப்பு பூஜைகளுடன் நிறைவு

ராமலிங்க

ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா

Ramanathapuram District: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் ராமாயண காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியான ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெற்று வருகின்றது.

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ராமாயண கால நிகழ்ச்சியான ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா முதல் பிரகாரத்தில் அமைந்துள்ள மூலவர் ராமநாதசுவாமி சன்னதியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் ராமாயண காலகட்டத்துடன் தொடர்புடைய திருக்கோவில் ஆகும். ராமன், சீதை, அனுமான் மணலில் லிங்கம் செய்து வழிபாடு நடத்தி ராமனுக்கு பாவ விமோட்சம் பெற்ற சிவத்தலமாகும்.

    இந்த திருக்கோவிலில் ஆண்டுதோறும் ராமாயண காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியான ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து இம்மாதம் 7ஆம் தேதி ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா தொடங்கியது.

    முதல் நாள் நிகழ்ச்சியான துர்க்கை அம்மன் கோவில் அருகே ராவணணுக்கு முக்தி அளித்தல். இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கோதண்டராமர் சுவாமி திருக்கோவிலில் ராமரிடம் இலங்கை மன்னன் ராவணன் தம்பி விபீஷணன் சரணாகதி அடைந்ததையடுத்து  இலங்கை மன்னனராக பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து ராமநாத சுவாமி திருக்கோவில் செல்லும் பாதையை காட்டும் கூகுள் மேப்:



    இதனைத் தொடர்ந்து மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக ராமநாதசுவாமி திருக்கோயிலில் ராமருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து, ராமநாதசுவாமி திருக்கோயிலில் ராமாயண கால நிகழ்ச்சியான ராமலிங்க பிரதிஷ்டை விழாவில் ஆஞ்சநேயர் இரண்டு லிங்கத்துடன் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் வலம் வந்த பின்னர் சுவாமி கருவறைக்குள் சென்றடைந்தது.

    இதன்பின் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியாக  பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram, Rameshwaram

    அடுத்த செய்தி