Home /ramanathapuram /

சுவாமி - அம்பாள் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படி எழுந்தருளல்.. ராமேஸ்வரத்தில் விழாக்கோலம்.. 

சுவாமி - அம்பாள் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படி எழுந்தருளல்.. ராமேஸ்வரத்தில் விழாக்கோலம்.. 

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் - பர்வதம்

Rameshwaram Parvatham : கெந்தமாதன பர்வதம் மண்டகப்படி என்னும் மறுவீடு எழுந்தருளல் நிகழ்ச்சியையொட்டி இன்று முழுவதும் ராமேஸ்வரம் கோவில் நடைசாத்தப்பட்டு, ராமர் பாதம் சென்று இரவு சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்று கோவிலுக்கு மீண்டும் செல்ல உள்ளது..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 23-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 17 நாட்கள் நடைபெற இந்த திருவிழாவானது வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நாளிலிருந்து அம்பாள் காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கெந்தமாதன பர்வதம் - சுவாமி ஊர்வலம்


திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 3-ந்தேதி அன்று சுவாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 16-வது நாளான நேற்று இரவு 7 மணிக்கு கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து சுவாமி அம்பாள் திருஊஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்று சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.

கெந்தமாதன பர்வதம் - சுவாமி ஊர்வலம்


இந்நிலையில், திருவிழாவின் கடைசி நாளான இன்று காலை 6 மணிக்கு சுவாமி-அம்பாள், பெருமாள் ஆகியோர் தங்க கேடயத்தில் கெந்தமாதன பருவத மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கெந்தமாதன பர்வதம் - சுவாமி ஊர்வலம்


அதனைதொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு கோவில் நடையானது சாத்தப்பட்டு இன்று முழுவதும் பக்தர்கள் கோவிலில் உள்ள தீர்த்தக் கிணறுகளில் புனித நீராடவும், தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படவில்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram

அடுத்த செய்தி