ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவு பகுதியில் பாம்பன் அடுத்த தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவன் லோகசுதன். இவர் சிலம்பம் கற்பதில் அதிக ஆர்வம் கொண்டு எந்த ஒரு ஆசிரியரும் இன்றி சிறுவயதில் இருந்து சிலம்பம் சுற்றி பயிற்சி எடுத்துவந்துள்ளார்.
மாவட்டத்தில் நடக்கும் போட்டிகளில் முதல் மாநிலத்தில் நடக்கும் போட்டிகளில் வரை அனைத்திலும் கலந்து கொண்டு பல பரிசுகளை வாங்கி குவித்துள்ளார். கடந்த 3-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற குளோபல் வோர்ல் ரெகார்டில் 4 மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி முதல் இடம் பெற்றார். இதுபோன்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளையும் பெற்றுள்ளார்.

சான்றிதழ்களுடன் மாணவர் லோகசுதன்..
வீட்டில் கடுமையான வறுமை இருந்தும், எந்த போட்டிக்கு சென்றாலும் கட்டிடம் கட்டும் வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் பணத்தின் மூலம் தனது சொந்த செலவில் அனைத்து ஊர்களிலும் நடக்கும் போட்டிகளுக்கு சென்றுள்ளார்.

மாணவன் லோகசுதன்
இவரின் அப்பா இருதய சிகிச்சை பெற்றுள்ளார், இதனால் தன் குடும்பம் மிகுந்த வருமைக்கு உள்ளானதை அடுத்து இவர் அடுத்தடுத்து நடக்கும் போட்டிகளில் பங்கேற்காமல் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

மாணவர் லோகசுதன் பெற்ற சான்றிதழ்..
மேலும் பல சிலம்ப போட்டிகளுக்கு சென்று சாதனை படைக்க விரும்பும் இவர், யாராவது தனக்கு ஊக்கத் தொகை அளித்து உதவிட வேண்டுமென கோரிக்கை வைக்கின்றார்.
(மாணவர் லோக சுதனுக்கு உதவ நினைத்தால் 70927 78554 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்...)
முகவரி:
எம்.குணசேகரன்,
4/2973, வலசை தெரு,
தங்கச்சி மடம்,
ராமேஸ்வரம் தாலுகா,
ராமநாதபுரம் மாவட்டம்
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.