Home /ramanathapuram /

வஞ்சிரம் மீன் சுவைக்கு இணையான கடவுறால் மீனின் சிறப்புகள்... 

வஞ்சிரம் மீன் சுவைக்கு இணையான கடவுறால் மீனின் சிறப்புகள்... 

கடவுறால்

கடவுறால் மீன் / Cobia Fish

Kadavural Fish  (Cobia Fish) : வஞ்சிரம் மீனுக்கு இணையான சுவை தரக்கூடிய மீன் தான் இந்த கடவுறால் மீன், ஊட்டத்து நிறைந்த இந்த மீனின் சிறப்புகள் பற்றி காண்போம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 90-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.  இந்த மீனவர்கள் வலையில் 100 கிலோ வரையிலும் கடவுறால் மீன்கள் (Cobia Fish) சிக்கியது. இந்த மீன் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை தற்போது தெரிந்து கொள்வோம்..

கடவுறால் மீன்கள் மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் அதிகளவில் வாழ்கின்றது. பாம்பன், மூக்கையூர், தூத்துக்குடி மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதியில் மீனவர்களுக்கு கிடைக்கிறது.
இந்த மீனில் ஊட்டச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது.  இம்மீன் சதை வஞ்சிரம் மீனுக்கு இணையான சுவை தரக்கூடியதாகும். கடல் விறால் என அழைக்கப்படுவதால் கடவுறால் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனுடைய தலை பகுதி உணவின் சுவைக்கு அற்புதமாக இருக்கும் என கூறுகின்றனர்.

கடவுறால் மீன் / Cobia Fish


இதனுடைய தோல் கடினமாக இருந்தாலும் சமைத்து சாப்பிடும் போது மென்மையாக தான் இருக்கும். 1 கிலோ முதல் 80 கிலோ வரையிலுமான எடை அளவுக்கு வளரும் தன்மையுடையது, தற்போது 5 கிலோவில் இருந்து 30 கிலோ வரை வரத்து வந்துள்ளது. அதிகபட்சமாக 5 கிலோவுக்கு மேல் தான் வலையில் சிக்கும்.

கடவுறால் மீன் / Cobia Fish


இந்த மீனை சாப்பிடுவது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதில், வைட்டமின் டி ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. மனசோர்வை தடுப்பதற்கும், மனநிலையை ஒழுங்கு படுத்துவதற்கும், ஒமேகா -3 ஊட்டச்சத்தும் இதில் உள்ளதாம். எண்ணெய் சத்து மிகவும் குறைவான மீனாகும். இதனால் ‌பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உட்கொள்ள முடியும்.

கடவுறால் மீன் / Cobia Fish


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த கடவுறால் மீனை ஆங்கிலத்தில் சல்மோன் ஃபிஷ் என்றழைக்கப்படுகிறது, ஒரு மணிநேரத்தில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்திச் செல்லும் தன்மை கொண்டது. கிலோவானது ரூ.500 லிருந்து ரூ.550 வரையிலும் விற்கப்படுகிறது.
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி