முகப்பு /ராமநாதபுரம் /

சாக்கடை நீரில் நீராடல்? ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை..

சாக்கடை நீரில் நீராடல்? ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை..

X
ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரை

Rameshwaram Agni Theertham : ராமேஸ்வரத்தை சுற்றி 64 தீர்த்தங்கள் உள்ளது. இதில் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு எதிரேயுள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் முதலில் நீராடி பின்பு கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி செல்வது வழக்கம். 

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலானது மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாகவும், 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும், காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாகும், ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதாகவும் உள்ளது. இவ்வளவு பெருமைகள் கொண்ட ஸ்தலமாக விளங்கி வருவதால் இங்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து ராமநாதசுவாமி கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு தனுஷ்கோடியில் புயலால் அழிந்த இடங்களையும் கண்டு களித்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், ராமேஸ்வரத்தை சுற்றி 64 தீர்த்தங்கள் உள்ளது. இதில் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு எதிரேயுள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் முதலில் நீராடி பின்பு கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி செல்வது வழக்கம். இந்த அக்னி தீர்த்தம் கடற்கரையில், தனியார் தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது மூன்று இடங்களில் கடலில் கலக்கிறது.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் கலக்கும் கழிவுநீர்

இதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வழக்கு ஒன்றில் கருத்து கூறும்போது, “இது தீர்த்த கடலா?. கழிவுநீரா?” என கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பி இதில் கோவில் இணை ஆணையாளரையும், மாவட்ட ஆட்சியரையும், நகராட்சி ஆணையாளரையும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க : கோவை குனியமுத்தூரில் ஜாக் கமிட்டி சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை.. நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு..

இதனைத்தொடர்ந்து, அப்போது நகராட்சி நிர்வாகம் சார்பில் சாக்கடை செல்லும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சில நாட்கள் சாக்கடை கழிவுகள் கடலில் கலக்காமல் இருந்தது. தற்போது மீண்டும் விடுதிகளின் கழிவுகள் கடலில் கலக்கிறது.  இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிவதோடு, சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. இதில் தினந்தோறும் புனித நீராடும் பக்தர்களுக்கு நோய்வாய்படும் அபாயமும் உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதையடுத்து, இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண நகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முதலில் பாதாள சாக்கடை திட்டத்தினை விரைந்து முடித்து கழிவுநீர் செல்வதை தடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் முதல் உள்ளூர் பொதுமக்கள் வரை கோரிக்கை வைக்கின்றனர்.

    First published:

    Tags: Local News, Ramanathapuram