Home /ramanathapuram /

தனுஷ்கோடியில் ஆக்ரோஷத்துடன் எழும் கடல் அலைகள்; அள்ளி வீசும் மணல்காற்று

தனுஷ்கோடியில் ஆக்ரோஷத்துடன் எழும் கடல் அலைகள்; அள்ளி வீசும் மணல்காற்று

தனுஷ்கோடி

தனுஷ்கோடி ஆக்ரோஷத்துடன் எழும் கடல் அலைகள்; அள்ளி வீசும் மணல்காற்று

Dhanushkodi: தனுஷ்கோடியில் வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றமாக உள்ளது, 20 அடிக்கு மேலாக ஆக்ரோஷத்துடன்  எழும் கடல் அலைகள். ஆபத்தான முறையில் புகைப்படங்கள் எடுத்து செல்லும் சுற்றுலா பயணிகள்

    தனுஷ்கோடியில் வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றமாக உள்ளது, 20 அடிக்கு மேலாக ஆக்ரோஷத்துடன் எழும் கடல் அலைகள். ஆபத்தான முறையில் புகைப்படங்கள் எடுத்து செல்லும் சுற்றுலா பயணிகள்

    தென்மேற்கு பருவமழை தற்போது தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது, அதேபோல திடீரென பலத்த காற்று வீசி வருகிறது.

    இந்நிலையில், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் வழக்கத்தைவிட 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடல் சீற்றம் அடைந்து காணப்படுகிறது. இதையடுத்து தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் துறைமுகத்தில் உள்ள ஜெட்டி பாலத்தில் கடல் அலைகள் மோதி 20 அடிக்கு மேல் அலைகள் ஆக்ரோஷத்துடன் எழுந்து காணப்படுகிறது.

    புயல் காற்று வீசுவது போல் மண்ணுடன் சேர்ந்து காற்றும் வீசுகிறது. இந்நிலையில், ஆண்டு தோறும் ஆனி மாத இறுதியிலும் ஆடி மாதத்திலும் தான் பருவக் காற்று வீசி வருவது வழக்கம் இந்த நிலையில் திடீரென கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது.

    மேலும் ஆக்ரோஷத்துடன் எழும் கடல் அலைகளை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு ஆபத்தான முறையில் புகைப்படங்கள் எடுத்து செல்கின்றனர். ஆக்ரோஷமாக அலை அடிக்கும் பகுதிகளுக்கு சுற்றுலா  பயணிகள் செல்லாமல் இருப்பதற்காக காவல்துறை சார்பில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram, Rameshwaram

    அடுத்த செய்தி