Home /ramanathapuram /

ராமேஸ்வரத்துக்கான முக்கிய சிறப்பு ரயில்களின் எண்கள் மாற்றம்

ராமேஸ்வரத்துக்கான முக்கிய சிறப்பு ரயில்களின் எண்கள் மாற்றம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ராமேஸ்வரத்துக்கான சிறப்பு ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டு அதன் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ராமேஸ்வரம்-ஹைதராபாத், செகந்திராபாத்-ராமேஸ்வரம் இடையே இயக்கப்பட்டு வந்த ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    வாராந்திர சிறப்பு ரயில்களான ராமேஸ்வரம்- ஹைதராபாத் ரயில் எண் 07686 எனவும், செகந்திராபாத் - ராமேஸ்வரம் ரயில் எண் 07685 எனவும் இருந்தன.

    ராமேஸ்வரத்தில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் புறப்படும் ஹைதராபாத் வாராந்திர சிறப்பு ரயிலின் புதிய எண்- 07696 ஆக முடிவு செய்யப்பட்டு அந்த ரயில் சேவையை வரும் டிசம்பர் 30 ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து, புதன்கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயிலின் புதிய எண் 07695 ஆக முடிவு செய்யப்பட்டு அந்த ரயில் சேவை டிசம்பர் 28 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் மட்டும் போத்தனூரில் நின்று சென்றது. தற்போது பயணிகளின் வசதிக்காக, ஆகஸ்ட் 5 ம் தேதி முதல் மேட்டுப்பாளையம்- நெல்லை வாராந்திர சிறப்பு ரயிலும் போத்தனூரில் நின்று செல்லும் என மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Ramanathapuram

    அடுத்த செய்தி