ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் சூரசம்காரம்.. சூரனை வதம் செய்த முருகப்பெருமான் - திரளான பக்தர்கள் பங்கேற்பு 

ராமேஸ்வரத்தில் சூரசம்காரம்.. சூரனை வதம் செய்த முருகப்பெருமான் - திரளான பக்தர்கள் பங்கேற்பு 

ராமேஸ்வரத்தில் சூரசம்காரம்

ராமேஸ்வரத்தில் சூரசம்காரம்

Soorasamharam | ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கோவிலின் நந்தி மண்டபத்தில் அமைந்துள்ள சன்னதியில் முருகனுக்கும், வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து மாலையில் கோவிலில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார், இதையடுத்து, மேலவாசல் அருகே சூரனின் தலையை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது

முருக பெருமானை மூன்று முறை சுற்றி வந்து சூரனின் தலையை கோவில் குருக்கள் முருகனின் வேல் கொண்டு சூரனின் தலையினை துண்டித்து சூரசம்கார நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து, வேலுக்கு பால், பன்னீர் அபிஷேகம் நடைபெற்று, வேலுக்கும் முருகனுக்கும் சிறப்பு தீபாரதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டு முருகப்பெருமானை வணங்கி சென்றனர்.

மேலும் படிக்க:  ராமநாதபுரம் மக்களே.. மின் விபத்தை தடுக்க இந்த எண்கள் நிச்சயம் உங்க மொபைலில் இருக்க வேண்டும்...

இதையடுத்து, நேர்த்திக்கடன் வேண்டியிருந்த பக்தர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து இறுதியாக மேலவாசல் முருகனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து நாளை நந்தி மண்டபம் அமைந்துள்ள முருகன் சன்னதியில் வள்ளி தெய்வானையுடன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram