முகப்பு /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.1 கோடியை தாண்டியது

ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.1 கோடியை தாண்டியது

X
உண்டியல்

உண்டியல் எண்ணும் பணி

Ramanathaswamy Temple : ராமேஸ்வரம் கோவிலின் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடியை தாண்டியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலின் உண்டியல் எண்ணும் பணி நிறைவு பெற்றதில் 1,19,82,629 ரூபாய் பணமும், 17.200 கிராம் தங்கமும், 710 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் கடந்த மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கோவில் உண்டியலில் பெறப்பட்ட காணிக்கைகள் எண்ணும் பணி இன்று கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள இதர கோவில்களில் பக்தர்கள் மூலம் தரப்பட்ட காணிக்கைகளை கோவில் பணியாளர்கள் மூலம் கைப்பற்றி காணிக்கைகள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் ராமேஸ்வரத்தில் உழவாரப்பணி மேற்கொள்பவர்கள், சேலம் மாவட்டத்தில் இருந்து வந்த தன்னார்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உண்டியல் எண்ணும் பணியை மேற்கொண்டனர்.

உண்டியல் எண்ணும் பணி நிறைவு பெற்றதில் 1,19,82,629 ரூபாய் பணமும், 17.200 கிராம் தங்கமும், 710 கிராம் வெள்ளியும் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Ramanathapuram