முகப்பு /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம்

ராமேஸ்வரம் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம்

X
ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் கோவிலில் நடந்த திருமணம்

Rameshwaram Temple | ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் ஒரு தம்பதிக்கு இலவசமாக திருமணம் நடைபெற்றது. பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு திருக்கோவிலில் இலவச திருமணங்கள் நடத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. மேலும், இதற்கான செலவுகளை கோவில் நிர்வாகமே ஏற்கும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்து அறநிலையத்துறையின் இணை மற்றும் துணை ஆணையாளர் மண்டலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இலவசமாக திருமணமானது நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் இந்து அறநிலையத்துறை சார்பில் அருப்புக்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் சத்தியா நகரை சேர்ந்த முனியசாமி – புவனேஸ்வரி என்ற தம்பதிக்கு இலவச திருமணம் செய்யப்பட்டது.

இதில் மணமக்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. இந்த திருமண நிகழ்வில் பொதுமக்கள், பக்தர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், தம்பதிகளின் உறவினர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

First published:

Tags: Local News, Ramanathapuram