Home /ramanathapuram /

அம்பாளுக்கு மஞ்சள் நீராட்டு விழா.. கன்னிமாவிளக்கு பூஜை.. ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண உற்சவம்..

அம்பாளுக்கு மஞ்சள் நீராட்டு விழா.. கன்னிமாவிளக்கு பூஜை.. ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண உற்சவம்..

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Ramanathapuram Latest News : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் ஆடித் திருக்கல்யாணதிருவிழா கடந்த ஜூலை23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் ஆடித் திருக்கல்யாண திருவிழா உற்சவத்தை முன்னிட்டு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.பெண்கள் நல்ல வரண்அமைய வேண்டி திருமணம் ஆகாத இளம் பெண்களும், திருமணமான பெண்கள்குழந்தை வரம் வேண்டியும் நெய்விளக்கு ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் ஆடித் திருக்கல்யாணதிருவிழா கடந்த ஜூலை23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்துதினந்தோறும் காலை, இரவு எனஇருவேளைகளிலும் அம்பாள் பர்வதவர்த்தினி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ராமநாதசுவாமி கோவில்


இந்நிலையில் இன்று கோவிலில் இருந்து கருப்பு முத்தங்கி சேவையுடன் எழுந்தருளிய அம்பாள் நான்கு ரதவீதிகளிலும் உலா வரும்போதுபர்வதவர்த்தினிக்கு வடக்கு ரத வீதியில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

ஆடி திருக்கல்யாண உற்சவம்


அதனைத் தொடர்ந்து கோவிலில் உள்ள சிவ தீர்த்தத்தில் தீர்த்தம் நீராடிய பின் பர்வதவர்த்தினி சன்னதியில் கன்னிப் பெண் பூஜை நடைபெற்று தீபஆராதனை நடைபெற்றது, இதனை உள்ளூர் பெண்கள் பக்தர்கள் ஏராளமானோர் கண்டு தரிசனம் செய்தனர்.

ஆடி திருக்கல்யாண உற்சவம்..


இந்த கன்னிமாவிளக்கு பூஜை செய்ய அதிகாலை முதலேஅதிகளவில் பக்தர்கள் கூடினர். போதிய இடவசதி இல்லாததாலும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்ததாலும் நெருக்கடிக்கு மத்தியில்பூஜை செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்தபூஜை செய்வதால் திருமணம்ஆகாத கன்னி பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற்று நல்ல மணவாளனுடன் மணம் முடியும் மற்றும் மணமுடிந்து குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக ராமாயண காலத்து வரலாறாக உள்ளது. இது பல ஆயிரம் ஆண்டுகளாக இன்றளவும் நடைமுறைப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram

அடுத்த செய்தி