ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு தபசு மண்டகப்படியில் சுவாமி அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலில் கடந்த ஜூலை மாதம் 23ந்தேதி ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து தினந்தோறும் காலை, இரவு ஆகிய இருவேளைகளிலும் அம்பாள் நான்கு ரதவீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில், கடந்த 30ந் தேதி அம்பாள் தேரோட்டம் மிகச்சிறப்பாக நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் தேரை கலந்து கொன்டு வடம் பிடித்து இழுத்தனர். ஆகஸ்ட் 1 அன்றுஅம்பாளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. ஏராளமான பெண்கள் மாவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

ஆடி திருக்கல்யாணம் தபசு மண்டகப்படியில் சுவாமி அம்பாள் மாலை மாற்று உற்சவம்
ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று ராமர் தீர்த்தம் பகுதியில் தங்க ரிஷப வாகனத்தில் தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

சுவாமி அம்பாள் மாலை மாற்று உற்சவம்
இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியைதரிசனம் செய்தனர்.இதையடுத்து இன்று அதிகாலை2 மணி அளவில் சுவாமி அம்பாள் பூபல்லக்கில் காட்சி அளித்தார்.

சுவாமி அம்பாள் மாலை மாற்று உற்சவம்
ஆடிதிருவிழாவின் 12 வது நாளானஇன்றுகன்னியாலக்னத்தில் திருக்கோவில் தெற்கு கல்யான மண்டபத்தில் அலங்கார மேடையில் உலக நன்மை வேண்டி இரவு 7 மணியில் இருந்து 8.30 மணியளவில் சுக்லபட்ச பஞ்சமி திதியும்,அஸ்த நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாளுக்கும்-அருள்மிகு ராமநாதசுவாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.