முகப்பு /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் விமர்சையாக நடைபெற்ற கொடியேற்ற விழா

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் விமர்சையாக நடைபெற்ற கொடியேற்ற விழா

X
ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் விமர்சையாக நடைபெற்ற கொடியேற்ற விழா

Ramanatha Swamy Temple : ராமேஸ்வரம் திருக்கோவிலில் தங்ககொடி மரம் கொடியேற்ற விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில், தீர்த்தம் மூர்த்தி, ஸ்தலம் ஆகிய முப்பெருமைகளை கொண்டு காசிக்கு இணையான புண்ணிய ஸ்தலமாக கருதப்படுகிறது. இங்கு ஆடி திருக்கல்யாணம் மற்றும் மகா சிவராத்திரி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் மகாசிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்நிலையில், காலை ராமநாதசுவாமி சன்னதி எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேஷலக்னத்தில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து கொடிமரம் மற்றும் ராமநாதசுவாமி, ஸ்ரீபர்வதவர்த்த்தினி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் வெளியூர் பக்தர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

இந்த மகாசிவராத்திரி இன்று தொடங்கி 12 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவின் முக்கிய நாளான 18ம் தேதி சிவராத்திரி அன்று வெள்ளித்தேரில் சுவாமி - அம்பாள் உலாவரும் நிகழ்ச்சி நடைபெறும். அதற்கு மறுநாள் தேரோட்டம் நடைபெறும். இதன்பின் மறை நிலா அமாவாசையை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.

First published:

Tags: Local News, Ramanathapuram