ஹோம் /ராமநாதபுரம் /

நள்ளிரவு பெய்த கனமழையால் ராமநாதசுவாமி கோவிலில் தேங்கிய மழைநீர்.. பக்தர்கள் அவதி..

நள்ளிரவு பெய்த கனமழையால் ராமநாதசுவாமி கோவிலில் தேங்கிய மழைநீர்.. பக்தர்கள் அவதி..

ராமநாதசுவாமி

ராமநாதசுவாமி கோவிலில் தேங்கிய மழைநீர்

Rameshwaram Ramanathaswamy Temple | ராமேஸ்வரம் பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக ராமநாதசுவாமி திருக்கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Rameswaram

ராமேஸ்வரம் தீவு பகுதியில் நள்ளிரவில் பெய்த கனமழையால் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்குள் புகுந்த மழைநீரால் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகினர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நள்ளிரவு பெய்த கனமழையால் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. திருக்கோவில் வளாகத்தில் சூழ்ந்துள்ள மழை நீரை திருக்கோவில் துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.

தெற்கு வங்ககடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் கன பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் நேற்று நள்ளிரவு தொடர்ந்து கனமழை பெய்தது.

மேலும் படிக்க:  சொந்த வீடு வாங்கவும், சொத்து பிரச்சினை நீங்கவும் வழிபட வேண்டிய கோவில்!

ராமேஸ்வரம் பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக ராமநாதசுவாமி திருக்கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது. மழைநீர் வெளியே செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டதால் வெளியே மழைநீர் செல்ல முடியாமல் தேங்கியது.

இதையடுத்து, இன்று ஞாயிற்று கிழமை என்பதால் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திருக்கோவில் வந்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதியுற்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர் கோயிலுக்குள் தேங்கிய மழை நீரை கோயில் துப்புறவு பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 75மிமீ தங்கச்சிமடத்தில் 40.2 மிமீ மழை பதிவாகியுள்ளது.

Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram