ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் அமைச்சர் ஆய்வு.. உள்ளூர் மக்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..

ராமேஸ்வரத்தில் அமைச்சர் ஆய்வு.. உள்ளூர் மக்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..

ராமேஸ்வரத்தில் அமைச்சர் ஆய்வு..

ராமேஸ்வரத்தில் அமைச்சர் ஆய்வு..

Rameshwaram Ramanathaswamy Temple | ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலானது தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரக்கூடிய புண்ணிய ஸ்தலம் ஆகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Rameswaram

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தும், மழைக்காலங்களில் கோவில் பிரகாரத்தில் தேங்கும் மழைநீர் குறித்தும், அக்னி தீர்த்தம் கடற்கரையில் கலக்கும் கழிவுநீர் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலானது தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரக்கூடிய புண்ணிய ஸ்தலம் ஆகும். இங்கு பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாது நாடுகளிலிருந்தும்  ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு சுவாமி தரிசனத்துக்காக வரும் பக்தர்களுக்காக ஏற்படுத்த கூடிய வசதிகள் குறித்து பல ஆய்வுகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்,  அறநிலையத்துறை ஆணையர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தனர்.

மேலும் படிக்க:  தஞ்சை பெரிய கோயில் சதய விழாவில் என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் தெரியுமா?

இந்த ஆய்வில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்களிடம் கோவிலில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் குறைகளை கேட்டு அறிந்தார். இதன்பின் பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது இடையூறாக இருந்த தடுப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து திருக்கோவிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நேரடியாக ஆய்வு செய்து பக்தர்கள் தீர்த்தத்தில் குளிக்கும் தண்ணீர் வெளியே சென்று கடலில் கலப்பது குறித்தும். மேலும், தண்ணீர் செல்லும் வழியில் குப்பைகள் சென்று அடைப்பு ஏற்படாமல் இருப்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

கோவிலில் தேங்கும் மழை நீர்:

மழை பெய்யும் போது மழைநீர் எவ்வாறு கோவிலின் பிரகாரத்தில் தங்குகிறது, இனிமேல் தங்காமல் விரைவில் வெளியே செல்வது குறித்தும் கோவில் நிர்வாகத்திடம் ஆலோசனை செய்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் படிக்க:  நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போறீங்களா? - இனி வகை வகையாய் வயிறார சாப்பிடலாம்

அக்னி தீர்த்தம் கடற்கரையில் கலக்கும் கழிவுநீர் குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் அக்னி தீர்த்தமா? கழிவுநீர் தீர்த்தமா? என்று கேள்வி எழுப்பியது. இதையடுத்து, அக்னி தீர்த்தம் கடற்கரையில் கழிவுநீர் கலக்கும் இடங்களை ஆய்வு செய்து, கழிவுநீர் கடலில் கலப்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை செய்து விரைவில் அதற்கு ஒரு முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை:

உள்ளூர் மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தரிசனம் செய்வதற்குள் கடும் இன்னல்களை சந்திப்பதாக குற்றாச்சாட்டு எழுந்துள்ளது, இனிமேல் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எந்தவொரு இடையூறும் இன்னலும் இல்லாமல் விரைவில் தரிசனம் செய்ய வழிவகை செய்யப்படும் என்றும், குறைகள் இருந்தால் நேரடியாக தொலைபேசி மூலமாகவோ புகார் அளிக்கலாம் என்று கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இலங்கையில் சொத்துக்கள்:

இந்நிலையில், ஆக்கிரமிப்பில் இருந்த இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சுமார் 3,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது, இதேபோல் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் இலங்கையில் உள்ளதாகவும், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சீரான பிறகு இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டு அதனை மீட்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram