முகப்பு /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தின் வடக்கு காவல் தெய்வம்.. பத்திரகாளியம்மன் ஆலய பூச்சொரிதல் விழா.. 

ராமேஸ்வரத்தின் வடக்கு காவல் தெய்வம்.. பத்திரகாளியம்மன் ஆலய பூச்சொரிதல் விழா.. 

X
ராமேஸ்வரத்தின்

ராமேஸ்வரத்தின் வடக்கு காவல் தெய்வம்

Rameswaram Pathirakaliamman Temple : ராமேஸ்வரத்தின் காவல் தெய்வமான பத்திரகாளி அம்மன் கோவிலின் 40ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

  • Last Updated :
  • Rameswaram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலானது வரலாற்று சிறப்புமிக்க 4 திசைகளில் வீற்றிருக்கும் காவல் தெய்வங்களில் வடக்கில் அமைந்திருக்கும் காவல் தெய்வமாகும்.

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பூச்சொரிதல் விழா கோவில் நிர்வாகம் சார்பில் கடந்து 40 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருப்பது வழக்கமான ஒன்றாகும்.

இந்நிலையில், இன்று அதிகாலை முதல் ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அம்மன் அருள்பெற கோவிலில் குவிந்தனர்.

பத்திரகாளியம்மன் ஆலய பூச்சொரிதல் விழா

மேலும், காப்பு கட்டிய பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த அக்னி சட்டி எடுத்தும், பால்குடம் எடுத்தும், அலகுகள்குத்தி காவடி எடுத்தும் பாத்திரகாளியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ராமநாதசுவாமி திருக்கோவிலின் 4 ரத வீதிகளிலும் சுற்றிவந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதனைத்தொடர்ந்து, பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் செலுத்திய பாலைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு பாலபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இரவு மேல் பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது.

    First published:

    Tags: Local News, Ramanathapuram, Rameshwaram