Home /ramanathapuram /

மனிதர்கள் போன்ற பல்வரிசை.. வயிற்றில் நஞ்சு.. ‘கடல் கோழி’ (எ) பேத்தை மீன் பற்றி தெரியுமா?

மனிதர்கள் போன்ற பல்வரிசை.. வயிற்றில் நஞ்சு.. ‘கடல் கோழி’ (எ) பேத்தை மீன் பற்றி தெரியுமா?

‘கடல்

‘கடல் கோழி’ (எ) பேத்தை மீன்

Ramanathapuram Latest News : தென்கடல் பகுதியில் வாழக்கூடிய  கடல் கோழி என்று அழைக்கப்படும் பேத்தை மீன் பற்றிய சிறப்புகளை காண்போம்.. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
ராமேஸ்வரம் பாம்பன் பகுதி மீனவர்கள் வலையில், மன்னார் வளைகுடா தென்கடல் பகுதியில் வாழக்கூடிய  ‘கடல் கோழி’ என்று அழைக்கப்படும் பேத்தை மீன் அதிகளவில் சிக்கியுள்ளது. இந்த மீனின் சிறப்புகளை காண்போம்..

சூறாவளி காற்று காரணமாக 10 நாட்களாக ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர், காலநிலை மாற்றம் ஏற்பட்டு இயல்பு நிலை திரும்பிய பிறகு மீன்வளத்துறை அதிகாரிகளால் டோக்கன் கொடுக்கப்பட்டு அதன் பிறகு மீன் பிடிக்க கடலுக்குள் சென்று மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய மீனவர்களுக்கு  ‘கடல் கோழி’ என்று அழைக்கக்கூடிய பேத்தை மீன் அதிக அளவில் சிக்கி உள்ளது.

இந்த பேத்தை மீனானது மனிதர்களை போன்று பற்கள் உடையது, இதற்காக தான் இதன் விலங்கியல் பெயர் டெட்ராடான் என்று வைக்கப்பட்டுள்ளது, டெட்ராடான் என்பதற்கு லத்தீன் மொழியில் நான்கு பற்கள் என்று அர்த்தமாகும்.

பேத்தை மீன்


இந்த வகை மீனை பாம்பன் மீன் கம்பெனிகளில் தோல் நீக்கி சுத்தம் செய்து இதன் வயிற்று பகுதியில் இருக்கக்கூடிய கொடிய விஷமான டெட்ராடாக்ஸின் எடுத்து விட்டு சுத்தம் செய்து தூத்துக்குடிக்கு கிலோ 50 முதல் 70 வரையிலும் அனுப்பி வைக்கப்படுகிறது.

பேத்தை மீன்


இந்த மீன் கோழிகள் போன்று சுவை உடையதால் கடல்கோழி என்றழைக்கப்படுகிறது, பாம்பனில் இருந்து தூத்துக்குடிக்கும், அங்கிருந்து வெளிநாட்டிற்கு வான்வழி மற்றும் கடல்வழியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதன் இரு கண்கள் 360 டிகிரி சுற்றி பார்க்கும் தன்மை உடையது, குளிர் அதிகம் உள்ள பகுதிகளை விட மற்ற அனைத்து பகுதிகளில் இவை வாழ்கின்றன என்று கூறப்படுகிறது. தான் வாழும் இடத்திற்கு ஏற்றவாறு நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை உடையது.

பேத்தை மீன்


உலகம் முழுவதும் 121 வகையான பேத்தை மீன் இருக்கின்றன, இதில் சில வகை இனப்பெருக்கத்திற்காக ஆறுகளிலும் வாழ்கின்றனவாம். இவை நீந்தும் விதம் மன்ற மீன்களைப் போல் இல்லாமல் மாறுபடும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனை தாக்க வரும் எதிரிகளை பயமுறுத்த கடல் நீரை உள் இழுத்து பலூன் போன்று மாறி நீந்துகின்றன. இதை பார்க்கும் எதிரி மீன்கள் பயந்து ஓடி விடுமாம். தண்ணீரிலிருந்து வெளியே விட்டாலும் காற்றை இழுத்துக் கொண்டு பலூன் போன்று மாறும் தன்மை உடைய விசித்திர மீனாகும்.
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி