ஹோம் /Ramanathapuram /

முறையாக பராமரிக்கப்படாத குப்பைத் தொட்டிகள்: பாலிதீன் குப்பையாக காட்சியளிக்கும் புயல் காப்பகம்.!

முறையாக பராமரிக்கப்படாத குப்பைத் தொட்டிகள்: பாலிதீன் குப்பையாக காட்சியளிக்கும் புயல் காப்பகம்.!

ராமநாதபுரம் குப்பைக் கிடங்கு

ராமநாதபுரம் குப்பைக் கிடங்கு

பாம்பன் ஊராட்சி புயல் காப்பகம் பகுதியில் குப்பை தொட்டிகள் சாய்ந்து கிடப்பதால் குப்பைகளை கீழே கொட்டிச் செல்வதால் அப்பகுதி முழுக்க பாலிதீன் பைகாளாக காட்சி அளிக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் இரண்டாம் வார்டு பகுதியில் 300-க்கும்‌ மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின்‌ பிரதான தொழிலாக விளங்குவது மீன்பிடிப்பது தான்.

இங்கு தினந்தோறும் குப்பைகளை கொட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் குப்பை தொட்டிகள் உடைந்தும், மாடுகள் குப்பை தொட்டியின் மேல் ஏறி குப்பைத்தொட்டி சாய்ந்தும் விட்டது.

இதையடுத்து, சாய்ந்த குப்பை தொட்டிகளை கூட‌ முறையாக வைக்காத ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பொதுமக்கள் குப்பைகளை அந்தப் பகுதியில் கீழே கொட்டத்துவங்கினர்.

கவிழ்ந்து கிடக்கும் குப்பைக் கிடங்குகள்

இந்நிலையில், குப்பைகளை தினந்தோறும் கீழே கொட்டுவதால் அப்பகுதி முழுக்க துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை தினந்தோறும் வந்து அள்ளுவது இல்லை என்றாவது ஒரு நாள் வந்து அள்ளுவதாகவும் கூறுகின்றனர். இந்த பகுதியின் அருகில் ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் புயல் காப்பகம் விளையாட்டு மைதானமும் உள்ளது.

குவிந்து கிடக்கும் பாலிதீன் பைகள்

குப்பைகளுடன் சேர்ந்து ப்ளாஸ்டிக் பைகள் அதிகளவில் உள்ளன. குப்பைகளை உண்ணும்‌ ஆடு, மாடுகள் பாலிதீன் பைகளையும் உண்ணுகின்றன. அதனால், மாடுகள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. அந்தப் பகுதி முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு துர்நாற்றம் வீசிய நிலையில் உள்ளது.

குப்பைத் தொட்டிகள்

குப்பை தொட்டிகளை சரிசெய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து குப்பைகளை தேக்காமல் தினந்தோறும் அதை சுற்றம் செய்து நோய்கள் ஏதும் ஏற்படாமல் தங்களை பாதுகாக்க வேண்டும்‌ என அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram