ஹோம் /Ramanathapuram /

ராமேஸ்வரம் மேலவாசல் முருகன் கோயிலில் வைகாசி விசாகம்.. பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்

ராமேஸ்வரம் மேலவாசல் முருகன் கோயிலில் வைகாசி விசாகம்.. பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்

வைகாசி

வைகாசி விசாகம்

Vaikasi Visakam: விசாக நட்சத்திரமானது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும். முருகப்பெருமான் இந்த விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு விசாகன் என்று பெயர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதிகாலை முதலே ராமேஸ்வரம் மேலவாசல் முருகன் கோயிலில் நேர்த்திகடன் செலுத்த ஏராளமானோர் குவிந்து பால்குடம் எடுத்தும் காவடி எடுத்தும்பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

  இளவேனிற் காலத்தின் பிற்பகுதி என்பதால் வைகாசி மாதம் வசந்த காலமாக இந்தியாவில் உள்ளது. எனவே இந்த வசந்த காலமான வைகாசி விசாக தினத்தில் கோயிலில் வசந்த உற்சவ விழாக்கள் நடத்தப்படுகின்றன.

  விசாக நட்சத்திரமானது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும். முருகப்பெருமான் இந்த விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு விசாகன் என்று பெயர். வி என்றால் மயில், சாகன் என்றால் பயணம் என்று பொருள். மயில் மீது பயணம் செய்யக் கூடியவர் என்று பொருள்படும். ஆறுமுகன் அவதரித்த இந்த பௌர்ணமியுடன் கூடி வரக்கூடிய வைகாசி விசாக நட்சத்திரம் ஆகும்.

  இந்நிலையில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமிக்கு பாத்தியப்பட்ட மேலவாசல் முருகனுக்கு பொதுமக்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று பால் அபிஷேகம் செய்து வந்தனர்.

  ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து மேலவாசல் முருகன் கோவில் செல்லும் பாதையை காட்டும் கூகுள் மேப்...

  இதையடுத்து, மேலவாசல் சிறு குறு வியாபாரிகள் சங்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட வைகாசி விசாக விழாவில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடனாக பால் காவடி, மயில் காவடி எடுத்து நான்கு ரத வீதிகள் வழியாக வந்து மேலவாசல் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கபட்டது.

  செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.

  Published by:Arun
  First published:

  Tags: Ramanathapuram, Rameshwaram