முகப்பு /ராமநாதபுரம் /

மேலவாசல் முருகன் கோவில் பங்குனி உத்திரம் விழா.. களைகட்டிய ராமேஸ்வரம் வீதிகள்..

மேலவாசல் முருகன் கோவில் பங்குனி உத்திரம் விழா.. களைகட்டிய ராமேஸ்வரம் வீதிகள்..

X
மேலவாசல்

மேலவாசல் முருகன் ஆலயம் பங்குனி உத்திரம் திருவிழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு

Rameshwaram Melavasal Murugan Temple | உலக பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவிலின் உபகோவிலான மேலக்கோபுர வாசலில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பால சுப்ரமணியன் சுவாமி கோவில் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மேலவாசல் முருகன் ஆலயத்தின் 61ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும் காவடிகள் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ராமேஸ்வரம் அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 61 ஆண்டுகளாக, உலக பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவிலின் உபகோவிலான மேலக்கோபுர வாசலில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பால சுப்ரமணியன் சுவாமி கோவில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் காவடிகள் எடுக்க தொடங்கினர்.

இந்நிலையில், அதிகாலை 2 மணிமுதல் ஆலயமானது திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய தொடங்கினர். பாம்பன், தங்கச்சிமடம், நடராஜபுரம், புதுரோடு, கெந்தமாதன பர்வதம், மற்றும் ராமேஸ்வரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, பால்குடம் எடுத்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பால் காவடி, பறவைகாவடி, தேர்காவடி, ஓம்காவடி, மயில்காவடி போன்ற பல்வேறு வகையான காவடிகளை எடுத்து பாலசுப்ரமணிய சுவாமிக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். இந்தாண்டு பங்குனி உத்திரம் திருவிழா ஒட்டி இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் காவடி எடுத்தனர், அதன் பிறகு சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

இந்நிலையில், பக்தர்கள், பொதுமக்கள் வசதிக்காக சாலை முழுவதும் ஆங்காங்கே அன்னதானம், நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களுக்கு உணவு, மோர் வழங்கப்பட்டது.பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க, நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram