ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு..  

ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு..  

போதை பொருள்  விழிப்புணர்வு

போதை பொருள் விழிப்புணர்வு

Ramanathapuram Latest News | ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் மற்றும் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி காரைக்குடி 9வதுபட்டாலியன் தேசிய மாணவர் படை (NSS)சார்பாக துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் மற்றும் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில் ராமேஸ்வரம் காவல் துணை காவல் கண்காணிப்பாளர் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் பற்றி விழிப்புணர்வும் அதனால் ஏற்படும் தீமைகளும் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.

ராமேஸ்வரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதால் இங்கு அதிக போதை பொருள் புழக்கம் அதிகம் உள்ளது. மேலும் ராமேஸ்வரம் பகுதியில் மதுபானக்கடைகள் இல்லாததால் பாம்பனிலிருந்து வாங்கி வந்து இங்கு கள்ள மதுபானவிற்பனை நடைபெறுகிறது.

மேலும் படிக்க: விஜய் படமே இங்கதான் எடுத்திருக்காங்க பாருங்களேன்..! இந்த கோயில்ல இத்தனை படங்கள ஷூட் பண்ணிருக்காங்களா?

இதனை தடுக்கும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக பொறுப்பேற்ற துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தீவிர போதைப்பொருள் தடுப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் அடிப்படையில் பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுப்பதற்காக பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள், காரைக்குடி 9த் பட்டாலியன் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் படிக்க: திருச்சியில் குறைந்த செலவில் மகிழ்ச்சி நிறைந்த மலை சுற்றுலா - இங்கு இத்தனை அருவிகள் இருக்கா..!

மாணவர்கள் இருக்கும் பகுதிகளில் போதைப் பொருள் மற்றும் கள்ளமது விற்பனை செய்வோரை பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதையடுத்து பள்ளி மாணவர்கள் பதாகைகள் ஏந்தி ராமநாதசுவாமி திருக்கோவிலில் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்து திட்டக்குடி பகுதி வழியாக பள்ளிக்கு சென்றடைந்தனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram