Home /ramanathapuram /

ராமேஸ்வரம் துறைமுகத்தில் தூண்டில் வளைவு வசதி தேவை - மீனவர்கள் கோரிக்கை

ராமேஸ்வரம் துறைமுகத்தில் தூண்டில் வளைவு வசதி தேவை - மீனவர்கள் கோரிக்கை

ராமநாதபுரம்

ராமநாதபுரம் - ராமேஸ்வரம் துறைமுகம்

Rameshwaram Harbour : ராமேஸ்வரம்  மீன்பிடித்துறைமுக பாலத்தை அகலப்படுத்தி புதுப்பிப்பதோடு,  விசைப்படகுகள் சேதமடையாமல் காப்பதற்கு தூண்டில் வளைவு அமைத்து தர மீனவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram | Rameswaram
ராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுக பாலத்தை அகலப்படுத்தி புதுப்பிப்பதோடு, வும், விசைப்படகுகள் சேதமடையாமல் காப்பதற்கு தூண்டில் வளைவுடன் கூடிய மீன்பிடி துறைமுகம் அமைத்து தர மீனவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ராமேஸ்வரம்  தமிழ்நாட்டில் மிகப்பெரிய மீன்பிடி துறைமுகமாகும், இங்கு 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 600 நாட்டுப்படகுகளும், 50 ஆயிரத்திற்கும் மேலான மீனவர்களும், மீன்பிடி சார்பு தொழிலாளிகளும் உள்ளனர்.

1975-ம் ஆண்டு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 20 படகுகள் நிறுத்த மீன்பிடி துறைமுகம் மீன்களை இறக்குவதற்கும், படகுகளை பராமரிப்பதற்கும் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது.

ராமேஸ்வரம் துறைமுகம்


இதனால், மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி மீன்களை இறக்கவும், படகுகளை பராமரிப்பதற்கும் போதிய வசதி இல்லாமல் போய்விட்டது.

ராமேஸ்வரம் துறைமுகம்


இதையடுத்து, மீனவர்களின் வசதிக்காக ஆழ்கடல் மீன்பிடிப்பதை ஊக்குவிக்க ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் குந்துகால் கடற்கரையில் மத்திய, மாநில அரசு 200 படகுகள் நிறுத்தும் அளவில் ரூ.73 கோடி செலவில் மீன்பிடி துறைமுகம் அமைத்தது.

ராமேஸ்வரம் துறைமுகம்


இந்நிலையில், திறக்கப்பட்ட போது மீனவர்கள் தங்களது படகுகளை நிறுத்தி மீன்களை இறக்கியும், படகுகளை பராமரித்தும், வலைகளை சரிசெய்தும் மீன்பிடித்தனர். குந்துகாலில் மன்னார் வளைகுடா பகுதியில் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ராட்சத அலைகளால் படகுகள் சேதமடைந்து.

ராமேஸ்வரம் துறைமுகம்


இதனால் மீனவர்கள் குந்துகால் துறைமுகத்தில் படகுகளை நிறுத்தாமல் பாம்பன் சின்ன பாலத்தில் கடற்கரையில் படகுகளை நிறுத்துகின்றனர். கடந்த வருடம் அவ்வபோது வீசிய சூறைக்காற்றால் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்ததால் மீனவர்கள் இங்கு படகுகளை நிறுத்த முன்வருவதில்லை.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக பாலத்தின் தூண்கள் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதையடுத்து, மீனவர்கள் கோரிக்கையால் தற்போது  ரூ.23 கோடி செலவில் பாலம் புதுப்பிப்பு, விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஆய்வு சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த பாலத்தை புதுப்பிப்பதோடு புயல், சூறாவளி காற்று வீசும் போது விசைபடகுகளை பாதுகாக்க ராமேஸ்வரம் மற்றும் குந்துகால் பகுதியில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைத்து தங்களது விசைப்படகுகள் சேதமடையாமல் காப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram

அடுத்த செய்தி