Home /ramanathapuram /

Ramanathapuram | பாம்பனில் கிடைக்கும் கருவாட்டின் வகைகளும் மருத்துவ குணங்களும்- தெரிந்துகொள்ளுங்கள்

Ramanathapuram | பாம்பனில் கிடைக்கும் கருவாட்டின் வகைகளும் மருத்துவ குணங்களும்- தெரிந்துகொள்ளுங்கள்

விற்பனைக்கு

விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் கருவாடு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதிகளில் கருவாடு பெருமளவில் தயார் செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Rameswaram, India
பாம்பன் பாலத்திலிருந்து ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு சென்றாலே இருபுறமும் கருவாடு காய வைக்கும் பணியில் பெண்கள் ஈடுபடுவார்கள். அந்த கருவாடு காய வைப்பதைப் பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊறும். அந்த அளவுக்கு கருவாட்டின் மனமும் அப்பகுதியில் இருக்கும்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவு பகுதி தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் மண்டபம் வரையிலும் மீன்பிடிதொழிலே பிரதான தொழிலாக விளங்குகிறது.

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு அதிகளவில் மீன்களின் வரத்து கிடைத்தது. ஏற்றுமதி மற்றும் விற்பனை செய்யப்பட்ட மீன்கள் போக மீதமுள்ள மீன்களை கருவாடாக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். அப்போது வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்ததால் கருவாடாக மாற்றுவதற்கு மீனவர்களுக்கு எளிதாக இருந்தது.

கருவாடு விற்பனை கடை


தற்போது கருவாடு விற்பனையும் சூடுபிடித்து உள்ளது. இவ்வாறு கருவாடு விற்பனை செய்யப்படும் இடம் தான் இந்த நஸிமா கருவாட்டு கடை. இந்த கடையானது பாம்பன் காவல் நிலையம் அருகில் 10 வருடங்களாக இயங்கி வருகிறது.

விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கருவாடு


இந்த கருவாட்டு கடையில் அனைத்து வகையான கருவாடும் விற்க்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் முதல் சுற்றுலாப் பயணிகள் வரை அதிகளவில் இங்கு வாங்கி செல்கின்றனர்.

கருவாடு


வெளிமாவட்டங்களுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. வரும் சுற்றுலா பயணிகளிடம் தொலைபேசி எண்கள் பெறப்பட்டு அவர்களுக்கும் கொரியர் மூலமாக அனுப்பப்படுகிறது.

விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கருவாடு


இவர்கள் தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். இது போக கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கும் வாடிக்கையாளர் வாங்கி சென்று அங்கு விற்கின்றனர்.

கருவாடுகளின் விலை பட்டியல்

பால்திருக்கை ரூ 300

புள்ளிதிருக்கை ரூ.160

செந்திருக்கை ரூ.120

மணலை ரூ.150

கெட்டிக்காளை ரூ.200

சூரை ரூ.200

மாசி ரூ.600

நெத்திலி ரூ.300

சின்ன நெத்திலி ரூ. 240

நெய்மீன்சீலா ரூ.700

பண்ணா ரூ.300

சின்ன பண்ணா ரூ.160

பாறை ரூ.160

சூடை ரூ.100

வாவல் ரூ.200

நகரை ரூ‌200

வாலை ரூ.170

பால்சுறா ரூ.500

பொடி பண்ணா ரூ.160

கார்ல் ரூ.100

அயிலை கும்லா ரூ.160

சாவாலை ரூ.140

கணவாய் ரூ.160

கிளாத்தி ரூ.200

கட்டா ரூ.140

அசலை ரூ.100

முரள்துண்டு ரூ.140

கெளுத்தி ரூ.100


கருவாடு என்பது மீனை கழுவி அதனை சுத்தம் செய்து உப்பு மஞ்சள் தடவி வெயிலில் காய வைத்து கருவாடாக உணவிற்கு மாற்றுகின்றனர். இவ்வாறு செய்வதால் கருவாடு கெட்டுப்போகாது. கருவாடு உண்பதால் உடலில் சப்த தாதுக்கள் கூடும். மீனின் உள்ள நன்மைகளை போன்று கருவாட்டிலும் உள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி