Home /ramanathapuram /

ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எரியாத மின்விளக்குகள்.. அடிக்கடி ஏற்படும் விபத்துகள் 

ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எரியாத மின்விளக்குகள்.. அடிக்கடி ஏற்படும் விபத்துகள் 

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் நெடுஞ்சாலை, பொந்தம்புளி

Rameshwaram : திட்டக்குடி பகுதியில் இருந்து ராமேஸ்வரம் பேருந்து நிலையம் வரை செல்லும் சாலையில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாத நிலையில் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குவது அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சீதா தீர்த்தம் பகுதியில் இருந்து செம்மடம்  வரை ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கடந்த ஆண்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி தேசிய நெடுஞ்சாலை துறையினரால் சாலை அகலப்படுத்தப்பட்டது.

இந்த சாலையை அகலப்படுத்தி ஒரு வருடம் ஆகியும் இன்னும் சென்டர் மீடியன்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவில்லை, சென்டர் மீடியன் நடுவில் அமைக்கப்பட்ட மின்விளக்குகளும் அமைக்கப்பட்டதிலிருந்து எரியாமல் உள்ளது. இதன் காரணமாக பொந்தம்புளி இறக்கம் பகுதியானது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் பகுதியாக மாறியுள்ளது.

இன்னும் இரண்டு மாதங்களில் கார்த்திகை மாதம் வர உள்ளதால் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்து விடும். தற்போதே பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ராமேஸ்வரத்துக்கு பெரும்பாலும் வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவர்களே அதிகம் என்ற சூழலில் இது போன்ற காரணங்களால் அவர்கள் விபத்துகளில் சிக்கும் ஆபத்து அதிகரித்துள்ளது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பே தேசிய நெடுஞ்சாலை துறையினர் அப்பகுதியில் மின்விளக்குகளை பராமரித்து முறையாக செயல்படவைத்து விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதே ராமேஸ்வரம் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி