Home /ramanathapuram /

சூரைக்காற்றுக்கு மரம் விழுந்து ராமேஸ்வரத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் சேதம்.. அசம்பாவிதம் தவிர்ப்பு..

சூரைக்காற்றுக்கு மரம் விழுந்து ராமேஸ்வரத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் சேதம்.. அசம்பாவிதம் தவிர்ப்பு..

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

Ramanathapuram District | ராமேஸ்வரத்தில் வீசிய சூறைக்காற்றினால் அங்கன்வாடி மையத்தில் இருந்த பழமையான வேப்பமரம் சாய்ந்து விழுந்ததில் அங்கன்வாடி மையம் சேதமடைந்தது, இரவு நேரம் என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள கெந்தமாதன பர்வதம் நகர் பகுதியில் அங்கன்வாடி மையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் 15க்கும் மேற்பட்ட அப்பகுதி குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராமேஸ்வரம் தீவு பகுதிகளில் வழக்கத்தை விட காற்றின் வேகம் இரவில் அதிகரித்துள்ளது. இதையடுத்து, ராமேஸ்வரம் கெந்தமாதன பர்வதம் நகரில் பழமையான வேப்பமரம் சாய்ந்து அங்கன்வாடி மையத்தின் மீது விழுந்து உள்ளதால், அங்கன்வாடி மையம் சேதமடைந்து உள்ளது.

அங்கன்வாடி மையம் சேதம்..


மேலும் இரவு நேரத்தில் எதிர்பாராத விதத்தில் இந்த விபத்து நடந்ததால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையம் சேதம்..


இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்தில் மீது விழுந்து கிடக்கும் மரத்தை அப்புறப்படுத்துவதோடு அங்கன்வாடி மையத்தை சீரமைக்க பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பகுதி மக்கள் வலியுறுத்துள்ளனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram

அடுத்த செய்தி