Home /ramanathapuram /

அக்னி தீர்த்தம் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் விட்டுச் சென்ற குப்பைகளை அகற்றிய பள்ளி மாணவர்கள்..

அக்னி தீர்த்தம் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் விட்டுச் சென்ற குப்பைகளை அகற்றிய பள்ளி மாணவர்கள்..

அக்னி

அக்னி தீர்த்தம் கடற்கரை..

Ramanathapuram Latest News : அக்னி தீர்த்தக் கடற்கரையை சுத்தமாக வைத்திருக்கும் நோக்கில் ராமேஸ்வரம் அரசு பள்ளி ஆசிரியர்கள், NCC மாணவர்கள், நகராட்சி ஊழியர்கள் என 500க்கும் மேற்பட்டோர் இணைந்து கடற்கரையை தூய்மை செய்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
புனித் சாகர் அபியான் திட்டதின் மூலம் கடற்கரை பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக,  அரசு பள்ளி தேசியபடை மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பேரணியாக வந்து ராமேஸ்வரம் நகராட்சி பணியாளர்களுடன் இணைந்து அக்னி தீர்த்த கடற்கரையை சுத்தம் செய்தனர்.

தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தின் கீழ் நாடெங்கிலும் கடற்கரைப் பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கடற்கரையில் சுத்தப்படுத்தும் பணி..


புண்ணிய ஸ்தலமாக விளங்கும் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் அதே போல விடுமுறை மற்றும் திருவிழா காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி விட்டு செல்கின்றனர்.

கடற்கரையில் சுத்தப்படுத்தும் பணி..


இந்த அக்னி தீர்த்தம் கடற்கரையில் புனித நீராட வரும்போது வரும் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் , அவர்கள் உடுத்திய துணி மற்றும் குப்பைகளை விட்டு செல்கின்றனர், இதையடுத்து கடந்த வாரம் அமாவாசை தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து பாலிதீன் குப்பைகள்,  விட்டுச்சென்ற துணிகள் ஆகியவை அதிகமாக காணப்பட்டது.

கடற்கரையில் சுத்தப்படுத்தும் பணி..


இந்நிலையில்,  ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையை சுத்தமாக வைத்திருக்கும் நோக்கில் காரைக்குடி 9வது பட்டாலியன் கமெண்டிங் ஆபிசர் ரஜினிஸ் பிரதாப் மற்றும் ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர், இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் என 500க்கும் மேற்பட்டோர் இணைந்து கடற்கரையை தூய்மை செய்தனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கூறுகையில் நமது கடல்பகுதியில் அரியவகை கடல்பாசி, பவளப்பாறைகள், கடல் அட்டை போன்ற அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றனர், இவற்றை அழியாமல் காக்கும் நோக்கில் நகராட்சி நிர்வாகம் பாலித்தீன் ஒழிப்பில் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.

கடற்கரையில் சுத்தப்படுத்தும் பணி..


இதற்கு வனத்துறையினர் மற்றும் கடலோர காவல்படையினரும் ஒத்துழைப்பு தந்து சுற்றுலா பயணிகளிடம் இருந்து பாலதீன் பைகளை கடலில் கலப்பதை ஒழிக்க முழுவீச்சில் எங்களுடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நாங்கள் எவ்வளவு தான் பாலிதீன் பொருட்கள் கடலில் கலந்து பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுக்க முயற்சி எடுத்தாலும் இதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே சாத்தியம், இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ப்ளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து நகராட்சி ஊழியர்களிடம் தனித்தனியாக பிரித்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி