ஹோம் /ராமநாதபுரம் /

Ramanathapuram News : 500 மாணவர்கள் தொடர்ச்சியாக 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தல்.. ராமேஸ்வரத்தில் சாதனை முயற்சி..

Ramanathapuram News : 500 மாணவர்கள் தொடர்ச்சியாக 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தல்.. ராமேஸ்வரத்தில் சாதனை முயற்சி..

ராமநாதபுரம்

ராமநாதபுரம் - சிலம்பம் சுற்றும் மாணவர்கள்..

Ramanathapuram Latest News : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம் சுற்றும் சாதனை முயற்சியில் 500 மாணவர்கள் பங்கேற்று சாதனை நிகழ்த்தினர். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஆறுமுகன் பாரம்பரிய தற்காப்பு கலை அறக்கட்டளை சார்பாக தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை முயற்சியில் 500 மாணவர்கள் பங்கேற்று, சாதனை நிகழ்த்தினர்.

தமிழ் கடவுள் முருகப்பெருமானிடம் இருந்து தோன்றிய தமிழர்களின் வீர விளையாட்டு மற்றும் தற்காப்பு கலையாக விளங்குவது சிலம்பம். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள்  என பல்வேறு தரப்பினரும் சிலம்பம் மீதான ஈடுபாட்டால் இக்கலையை கற்றுத் தேர்ந்து வருகின்றனர். சிலம்பம் சுற்றுதலில் அவ்வப்போது சாதனை நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் மற்றும் 75வது சுகந்திர தினத்தையொட்டி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்வு நடைபெற்றது.

சிலம்பத்தில் சாதனை முயற்சி

இதில்  ராமநாதபுரம் மட்டுமல்லாது சென்னை, மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி, தேனி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 5 வயது சிறுவர், சிறுமியர் முதல் 25 வயது இளைஞர்கள் என சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்டு 5 மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சி செய்து சாதனை நிகழ்த்தினர்.

சிலம்பத்தில் சாதனை முயற்சி

இதற்கான ஏற்பாடுகளை ராமேஸ்வரம் சிலம்ப ஆசிரியர் ஆறுமுகம், சிலம்பம் நலச் சங்கம், கலாம் உலக சாதனை புத்தக நிறுவனம் ஆகியவை இணைந்து மேற்கொண்டிருந்தன.

இந்த போட்டியானது காலை 8.00 மணிக்கு சிலம்பம் சுற்ற தொடங்கிய மாணவர்கள் தொடர்ந்து மதியம் 1.00மணி வரை சிலம்பம் சுற்றி சாதனை முயற்சியில் ஈடுபட்டு சாதனை நிகழ்த்தினர். சாதனை நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ், கேடயம், பதக்கங்கள் வழங்கப்பட்டது.

சிலம்பம் சுற்றும் மாணவர்கள்..

இது குறித்து பெற்றோர்கள் கூறியதாவது:-

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறமைகள் உண்டு, பெற்றோர்கள் அவர்களது குழந்தைகள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவதை விட இதுபோன்ற விளையாட்டுகளிலும் அவர்களை ஊக்கப்படுத்தி கவனம் செலுத்த வைக்கவேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விளையாட்டில் திறமை படைத்தவர்களாக இருந்தால் அரசு வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை எதாவது விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என்றனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram