பாம்பன் குந்துகால் விவேகானந்தர் மணிமண்டபத்தில் ராமர் ராமேஸ்வரம் வந்த ராமாயண வரலாற்றை கூறும் ஒலி, ஒளிக்காட்சி மத்திய அரசு சுற்றுலாதுறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த குந்துதால் விவேகானந்தர் மணிமண்டபம் பகுதியில் மத்திய அரசு சுற்றுலாத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ராமாயண வரலாற்றை கூறும் இளையராஜா இசையில் ஒலி, ஒளி காட்சி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ராமாயண வரலாற்றை ஒருவர் கூறியும் புத்தகங்களில் படித்தும் பார்த்திருப்போம், ஆனால் இது போன்ற இசைஞானி இளையராஜா இசையில் அனிமேஷன் 3D எஃபெக்டில் பார்த்ததிருக்க மாட்டார்கள். இது ஒரு புதுவிதமாக 20 நிமிடம் சென்றதே தெரியாத அளவில் உள்ளது.

ராமேஸ்வரம் குந்துதால் விவேகானந்தர் மணிமண்டபம்
ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அக்காள்மடம் பகுதியில் 5 கிலோமீட்டர் தொலைவில் குந்துகால் அமைந்துள்ளது. சுவாமி விவேகானந்தர் சேதுபதி மன்னர் காலத்தில் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி அமெரிக்காவில் ஆன்மீக சுற்றுப்பயணத்தை முடித்து கப்பல் மூலம் ராமேஸ்வரம் தீவு பகுதியிலுள்ள பாம்பனை அடுத்த குந்துகால் துறைமுகத்தில் வந்திறங்கினார். 2013 ஆம் ஆண்டு இதன் நினைவாக குந்துகாலில் விவேகானந்தர் நினைவு மண்டம் அமைக்கப்பட்டது.

ராமேஸ்வரம் குந்துதால் விவேகானந்தர் மணிமண்டபம்
இங்கு வரும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மற்றும் விவேகானந்தர் வருகையின் வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் ஒலி-ஒளி காட்சி அமைக்க மத்திய அரசு சுதேஷ் தர்சன் சுற்றுலா நிதி மூலம் ரூபாய் 5.69 கோடியை தமிழக சுற்றுலாத்துறையிடம் வழங்கியது.

ராமேஸ்வரம் குந்துதால் விவேகானந்தர் மணிமண்டபம்
இதன் ஆயத்த பணிகள் 2020-ம் ஆண்டு தொடங்கியது. இந்த ஒலி ஒளி காட்சியை காண பெரியவர்களுக்கு 100 ரூபாயும், சிறியவர்களுக்கு 50 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் குந்துதால் விவேகானந்தர் மணிமண்டபம்
மேலும், இந்த ஒலி-ஒளி காட்சி குறித்து சுற்றுலாத்துறை சார்பில் ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதும் விளம்பர பதாகைகள் அமைத்து சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றனர் சுற்றுலாத்துறையினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.