Home /ramanathapuram /

3 வருடமாக உடைந்த பாலத்தை சீரமைக்கவில்லை.. வேதனை தெரிவிக்கும் வேதாளை ஊராட்சி மன்ற தலைவர்..

3 வருடமாக உடைந்த பாலத்தை சீரமைக்கவில்லை.. வேதனை தெரிவிக்கும் வேதாளை ஊராட்சி மன்ற தலைவர்..

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Ramanathapuram District News : ராமநாதபுரம் மாவட்டத்தின் வேதாளை ஊராட்சிக்கு உட்பட்ட சிவன் தெரு பகுதியில் தரைப்பாலம் உடைந்த நிலையில் அதனை சீரமைக்க அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக ஊராட்சி மன்றத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை ஊராட்சிக்கு உட்பட்ட சிவன் தெரு பகுதியில் தரைப்பாலம் உடைந்துள்ளதால் பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் வயதான முதியவர்கள் வரை சிரமத்திற்கு ஆளாகின்றனர். பல முறை மனுக்கள் கொடுத்தும் பயனில்லை என்று ஊராட்சி மன்ற தலைவரே வேதனை தெரிவித்துள்ளார்.

வேதாளை ஊராட்சி உட்பட்ட சிவன் கோவில் தெருவில் நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து தெருவுக்குள் செல்லும் சாலையில் மழைகாலத்தில் மழை நீர் தேங்குவதால் அதை கடந்து செல்வதற்காக கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தரை பாலம் அமைக்கப்பட்டது.

இந்த பாலமானது கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் சேதமடைய தொடங்கியது. மழைக்காலத்தில் சிறிது சிறிதாக உடைந்த நிலையில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் முற்றிலுமாக சேதமடைந்தது.

இந்த சிவன் தெரு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் வீடுகள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் இந்த வழியாக தான் பள்ளிக்கு சென்றாக வேண்டும்.

சின்னஞ்சிறு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக ஆட்டோக்கள் கூட உள்ளே வர முடியாத நிலை உள்ளது. அவசர கால நேரங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களும் உள்ளே வர இயலாததால் நோயாளிகளை அங்கிருந்து நெடுஞ்சாலை வரை தூக்கிக் கொண்டு வரும் அவலம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அப்பகுதி மக்களும், ஊராட்சி மன்ற தலைவரும் பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம்  மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் எங்களது குறையை கேட்டறிந்து இதற்கு ஒரு தீர்வுகாண தரைப்பாலத்தை சரிசெய்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டிக் கேட்டுக் கொண்டனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி