முகப்பு /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் உடைந்த குடிநீர் குழாய்... ஒரு மணி நேரமாக சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்

ராமேஸ்வரத்தில் உடைந்த குடிநீர் குழாய்... ஒரு மணி நேரமாக சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்

X
வீணாகப்

வீணாகப் போகும் குடிநீர்

Ramanathapuram | ராமேஸ்வரம் ராமர் தீர்த்தம் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக குடிதண்ணீர் வீணாக சாலையில் ஓடியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரம் ராமர் தீர்த்தம் தேசிய‌நெடுஞ்சாலையில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை முழுவதும் குடிநீர் ஆறாக ஓடியது. குடிநீர், சாக்கடை கால்வாய் அடைக்கப்பட்டிருந்ததால் கால்வாய்க்குள் குளம்போல் தேங்கி நின்றது குடிதண்ணீர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாதாள சாக்கடைப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியின்போது அடிக்கடி கனரக வாகனங்கள் குடிநீர் குழாயின் மீது ஏறுவதாலும், குழிகள் தோண்டும் போதும் அடிக்கடி குழாய்கள் உடைக்கப்படுகிறது.

இந்நிலையில், ராமேஸ்வரம் ராமர் தீர்த்தம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பாதாள சாக்கடை பணி நடைபெறும் போது குடிநீர் குழாய் உடைக்கப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக குடிதண்ணீர் வீணாக சாலையில் ஆறாக ஓடியுள்ளது. பின்பு ஜேசிபி மூலம் மண் கொண்டு அடைத்ததால் குடிநீர் சாலையில் செல்லாமல் சாக்கடை கால்வாய்க்குள் சென்றது.

First published:

Tags: Local News, Ramanathapuram