முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் ஆலயத்தில் ராமநவமி திருக்கல்யாணம் வைபவம்!

ராமநாதபுரம் ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் ஆலயத்தில் ராமநவமி திருக்கல்யாணம் வைபவம்!

X
ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் ஆலயத்தில் ராமநவமி திருக்கல்யாணம் வைபவம்

Ramanathapuram News | ராமநாதபும் மாவட்டம் பேராவூரில் அமைந்துள்ள ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் ஆலயத்தில் ராமநவமியை முன்னிட்டு திருக்கல்யாண வைபோகமானது விமர்சையாக நடைபெற்றது, இதில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் நகராட்சி பேராவூர் பேராகண்மாயில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் ஆலயமானது அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ராமநவமியை முன்னிட்டு ராமருக்கு, சீதைக்கும் திருக்கல்யாணம் விமர்சிகயாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நவமி திதியும் புனர்பூச நட்சத்திரமும் ஒன்றாக இணைந்திருப்பதால் ராமனுக்கும் சீதாவிற்கும் திருக்கல்யாண வைபோகம் மகா யாகம், காயத்ரி ஜெப மந்திரம் செய்து வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதில், பொதுமக்கள் ஒன்றாக இணைந்து மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என இரு வீட்டார்களாக 15 வகையான சீர் தாம்பூலங்கள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதையடுத்து, பூரண கும்பத்துடன் இரு வீட்டாரும் சேர்ந்து கன்னியாதானம் செய்தும் மாங்கல்ய தானம் செய்தும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் ஆலயத்தில் ராமநவமி திருக்கல்யாணம் வைபவம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைத்தொடர்ந்து, ராமன் சீதை பல்லக்கில் எழுந்துருளி அப்பகுதியில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த திருக்கல்யாண வைபவத்தில், சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

top videos
    First published:

    Tags: Local News, Ramanathapuram