Home /ramanathapuram /

Ramanathapuram | ராமநாதசுவாமி கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஆடி திருக்கல்யாண உற்சவம்

Ramanathapuram | ராமநாதசுவாமி கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஆடி திருக்கல்யாண உற்சவம்

ராமநாதசுவாமி

ராமநாதசுவாமி திருக்கல்யாணம்

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி அம்பாளை தரிசித்து சென்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
ஆடி திருக்கல்யாணத்தை முன்னிட்டு ராமநாதசாமி கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி அம்பாளை தரிசித்து சென்றனர்.

அகில இந்திய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகவும்,  முப்பெருமைகளை கொண்டதாகவும் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவில் உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் ஆடித்திருவிழா மற்றும் மாசித் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து நாள்தோறும் காலை, மாலை என அம்பாள் நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இந்த ஆடி திருக்கல்யாணத்தின் முக்கிய விழாவாக ஆடி அமாவாசை, திருத்தேரோட்டம், இரவு வெள்ளி ரதம், மாலை மாற்றுதல் நிகழ்வு, பூப்பல்லக்கில் அம்பாள் வீதி உலாவும் என முக்கிய விழாக்கள் நடைபெற்றன.

இந்நிலையில், இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் ராமநாதசுவாமி மற்றும் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி அம்பாளை தரிசித்து சென்றனர். மேலும் ஆகஸ்ட் 8-ம் தேதி திங்கட்கிழமை சுவாமி - அம்பாள் கெந்தமாதன பர்வத்தில் அமைந்துள்ள ராமர் பாதத்திற்கு மறுவீடு செல்லும் நிகழ்வு நடைபெறுகிறது.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு முன்னதாக சுவாமி அம்பாளை திரு ஊஞ்சலில் வைத்து சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளிய சுவாமி அம்பாள், வேத விற்பனர்கள் ஓமம் வளர்த்து, வேத மந்திரங்கள் முழங்க சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.

இந்த திருக்கல்யாண வைபோகத்தில், கோவில் துணை ஆணையர், தக்கார், ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசித்து சென்றனர். பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் ஈடுபட்டனர்.

செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி