முகப்பு /ராமநாதபுரம் /

16 நாட்களில் இத்தனை லட்சம் ரூபாயா?... ராமநாதசுவாமி கோயிலின் உண்டியல் வருவாய் விவரம்..!

16 நாட்களில் இத்தனை லட்சம் ரூபாயா?... ராமநாதசுவாமி கோயிலின் உண்டியல் வருவாய் விவரம்..!

X
உண்டியல்

உண்டியல் வசூல்

கோவில்களில் உண்டியல் காணிக்கை திருக்கோவில் பணியாளர்கள் மூலம் கிழக்கு கோபுர வாசலில் உள்ள மண்டபத்தில் எண்ணப்பட்டது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் 16 நாட்கள் கழித்து உண்டியல் எண்ணப்பட்டதில் 65 லட்சத்து 94 ஆயிரத்து 700 ரூபாய்  வருவாய் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் உலகபிரசித்த பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையானது ராமநாதசுவாமி திருக்கோவிலின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் உண்டியல் காணிக்கை திருக்கோவில் பணியாளர்கள் மூலம் கிழக்கு கோபுர வாசலில் உள்ள மண்டபத்தில் எண்ணப்பட்டது.

ராமநாதசுவாமி கோவில் காணிக்கை எவ்வளவு தெரியுமா ?

இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தேனி, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் சேர்ந்த தன்னார்வலர்களும், ராமேஸ்வரம் பகுதியில் பல்வேறு உழவாரப்பணிகள் மேற்கொள்பவர்களும் கலந்து கொண்டு அரசு விதிமுறையை பின்பற்றி உண்டியல் காணிக்கையை எண்ணத்தொடங்கினர்.

top videos

    இதையடுத்து, பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணிமுடித்த நிலையில் 65 லட்சத்து 94 ஆயிரத்து 700 ரூபாய் ரொக்கப் பணமும், 59.500 மில்லிகிராம் தங்கமும், 1 கிலோ 20 கிராம் வெள்ளியும் 16 நாட்களில் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    First published:

    Tags: Local News, Ramanathapuram