ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு - காணிக்கை விவரம்

ராமநாதசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு - காணிக்கை விவரம்

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் உண்டியல் எண்ணும் பணி

Ramanathaswamy Temple | ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலின்  உண்டியல் எண்ணும் பணி நிறைவு பெற்று  ஒரு கோடியே 56 லட்சத்து 44 ஆயிரம்  ரூபாய் பணமும், 45 கிராம்  தங்கமும், 560 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலின் உண்டியல் எண்ணும் பணி நிறைவு பெற்று ஒரு கோடியே 56 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பணமும், 45 கிராம் தங்கமும், 560 கிராம வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஒரு மாதம் கழித்து கோவில் உண்டியலில் பெறப்பட்ட காணிக்கைகள் எண்ணும் பணி நேற்று கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில், நம்புநாயகி அம்மன் கோவில், ராமர் தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், ஜடாயு தீர்த்தம், கோதண்டராமர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் மூலம் தரப்பட்ட காணிக்கைகளை கோவில் பணியாளர்கள் மூலம் கைப்பற்றி காணிக்கைகள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்று வந்தன.

இதையும் படிங்க : தனுஷ்கோடிக்கு சுற்றுலா போறீங்களா..! மறக்காம இதை எல்லாம் பார்த்துட்டு வாங்க..!

இந்நிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் ராமேஸ்வரத்தில் பல்வேறு பகுதிகளில் உழவாரப்பணி மேற்கொள்பவர்கள் உள்ளிட்டோர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உண்டியல் எண்ணும் பணியை மேற்கொண்டனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் கடந்த ஒரு மாதத்தில் பெறப்பட்ட காணிக்கைகளின் உண்டியல் எண்ணும் பணி நிறைவு பெற்றுள்ளது. அதில் உண்டில் எண்ணப்பட்டதில் ஒரு கோடியே 56 லட்சத்து 44ஆயிரத்து 686 ரூபாய் பணமும், 45 கிராம் 200 மில்லி கிராம் தங்கம், 560 கிராம் வெள்ளி கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாதத்திற்கு மாதம் எண்ணப்படும்போது ஒவ்வொரு முறைக்கும் அதிகரிக்கும் உண்டியல் காணிக்கை பணத்தை வைத்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு போதிய வசதிகளை கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்‌ என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram