முகப்பு /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம் கோவில் நிர்வாகத்தை கண்டித்து உள்ளூர் மக்கள் ஒரு நாள் பந்த்.. சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பா?

ராமேஸ்வரம் கோவில் நிர்வாகத்தை கண்டித்து உள்ளூர் மக்கள் ஒரு நாள் பந்த்.. சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பா?

X
ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் கோவில்

Ramanathapuram News : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நிர்வாகத்தினரை கண்டித்து  பொது வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் 12 ஜோதிடர்கள் லிங்கங்களின் ஒன்றாகவும், காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலம் விளங்குவதால் நாடு முழுவதும் மட்டுமின்றி உலகத்தில் அனைத்து பகுதியிலும் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக கோவிலுக்கு ஆகம விதிகளை மீறி சில மாறுதல்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டாக கூறுகின்றனர்.

இதில் கிழக்கு வாசல் பகுதியில் அமைந்துள்ள ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் சென்று தடை விதித்து, தற்போது கட்டணம் செலுத்தி சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களை மட்டும் அனுமதித்துள்ளனர். இலவசமாக தரிசனம் செய்யும் பக்தர்களை அவமதிக்கும் விதமாக கோவிலின் வெளியே வரும் வழியாக தடுப்புகளை அமைத்து பக்தர்களை சுவாமி தரிசனம் செய்ய விடுகின்றனர். இந்த தடுப்புகள் குறுகலான பகுதியாக இருப்பதால் நீண்ட நேரம் பக்தர்கள் வரிசையில் செல்லும்போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இந்த தடுப்புகளால் புகழ்பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் பக்தர்கள் காணமுடியாத சூழல் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.

உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு இருந்த வழியை அடைத்து ரூ.200 கட்டணத்தில் வழியே இலவசமாக செல்ல விடுகின்றனர். இதில் உள்ளூர்‌ பெண்கள் செல்லும்போது யாத்திரைகளுடன் நின்று செல்வதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக கூறுகின்றனர். இதையடுத்து, இவ்வாறு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்யும்போது சிரமம் அடைவதால் பலமுறை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அனைத்து கட்சியினரும் இணைந்து பல மனுக்களை கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கை இல்லாமல் மீண்டும் தொடர்வதால் ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், உணவு விடுதிகள் சங்கம், யாத்திரை பணியாளர்கள் சங்கம், தங்கும் விடுதி சங்கம், பிற அனைத்து சங்கங்களும் இணைந்து மக்கள் பாதுகாப்பு பேரவை என்ற அமைப்பை உருவாக்கி கூட்டமாகும் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கோவில் நிர்வாகம் மற்றும் கோவில் துணை ஆணையாளரை கண்டித்து வருகின்ற ஜனவரி 31ம் தேதி ராமேஸ்வரம் நகர் பகுதிகள் முழுவதிலும் அனைத்து கடைகள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் அடைத்து ஆட்டோக்கள், சுற்றுலா வேன்கள் அனைத்தும் செயல்படாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அன்று மட்டும் பந்த் அறிவித்துள்ளனர். மேலும், இந்நாளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தந்து சிரமத்திற்கு உள்ளாக வேண்டாம் என்றும், அதற்கு அடுத்தநாள் வந்து சுவாமி தரிசனம் செய்து சுற்றுலாத்தளங்களுக்கு செல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Ramanathapuram