ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் பேய்கரும்பில் திறக்கப்படும் மதுபானக்கடை.. குவியும் எதிர்ப்புகள்!

ராமநாதபுரம் பேய்கரும்பில் திறக்கப்படும் மதுபானக்கடை.. குவியும் எதிர்ப்புகள்!

X
மனு

மனு அளித்த பெண்கள்

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் பகுதியில் மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மனு அளித்தனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பேய்கரும்பு பகுதியில் மதுபானக்கடை திறக்க இருப்பதை தடுத்து நிறுத்தக்கோரி பெண்கள், அப்பகுதி கிராம மக்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்த தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ளது பேய்கரும்பு கிராமம். இந்தக் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் தான் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் நினைவகமும் உள்ளது. இப்பகுதிக்கு தினமும் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

பாம்பன் பகுதியில் மட்டும் மூன்று மதுபானக்கடைகள் உள்ளன. அக்காள்மடம், தங்கச்சிமடம், ராமேஸ்வரம் தீவு ஆகிய பகுதிகளில் மதுபானக்கடைகள் இல்லாததால் மது பிரியர்கள் பாம்பன் மதுபானக்கடைக்கு சென்று மது அருந்துகின்றனர். இந்நிலையில், தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பேய்கரும்பு பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பகுதியில் மதுபானக்கடை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து, அப்துல் கலாம் தேசிய நினைவகத்தின் அருகே மதுபானக்கடை திறப்பது அவரது புகழை சீர்குலைக்கும் செயல் என்றும் மேலும், இப்பகுதியில் மதுபானக்கடை திறந்தால் இங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் சீர்குழைந்து விடும் என்கின்றனர்.

இங்கே மதுபானக் கடை அமைத்தால் பள்ளி சென்று வரும் மாணவர்கள், மாணவிகள், பள்ளி, கல்லூரி வேலைக்கு சென்று விட்டு திரும்பும் பெண்களுக்கு இடையூறாகவும் ஆபத்தானதும் அமையும் என்பதால் இப்பகுதியைச்சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் அந்த கிராமத்தினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தடுத்து நிறுத்தக்கோரி மனு அளித்தனர்.

First published:

Tags: Local News, Ramnad, Tasmac