Home /ramanathapuram /

ராமேஸ்வரத்தில் மேளதாளத்துடன் கொண்டாட்டமாக சென்று அக்னி தீர்த்தக் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

ராமேஸ்வரத்தில் மேளதாளத்துடன் கொண்டாட்டமாக சென்று அக்னி தீர்த்தக் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

ராமநாதபுரம்

ராமநாதபுரம் சிலை கரைப்பு

வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி, விநாயகர் சிலைகள்  மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று அக்னி தீர்த்தம் கடற்கரையில் விஜர்சனம் செய்யப்பட்டது 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India
ராமநாதபுரத்தில் விநாயகர் சிலைகள் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அக்னி தீர்த்தம் கடற்கரையில் கரைக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியானது இந்துக்கள் பண்டிகைகளில் முக்கிய திருவிழாவாகும், ஆண்டுதோறும் ஆவணி மாதம் சதுர்த்தி நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. வருடம்தோறும் நடைபெரும் இந்துக்கள் விழாக்களில் இதுவும் ஒன்றாகும்.

கரைப்பதற்கு எடுத்துச் செல்லப்படும் விநாயகர்


ராமேஸ்வரத்தில் இந்து அமைப்பினர் சார்பில் பல இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இந்து மக்கள் கட்சியின் சார்பில் 16 இடங்களில் ஒவ்வொரு தெருக்களிலும் அதாவது கெந்தமாதன பர்வதம், பத்திரகாளி அம்மன் கோவில் தெரு, திட்டக்குடி தெரு, காமராஜர் நகர், வீரபத்திரசுவாமி கோவில் தெரு, கிழக்கு தெரு, மார்க்கெட் தெரு, ரயில்வே பீடர் ரோடு, தம்பியான் கொல்லை, காந்திநகர், ராமர் தீர்த்தம், கரையாதெரு, முருங்கைவாடி, ராமநாதசுவாமி நகர், ஜே.ஜே.நகர், திருவள்ளுவர் நகர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது.

விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் மேளதாளம்


இந்நிலையில், இரண்டு நாட்களாக விநாயகர் சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. கணபதி ஹோமம், நெய்வேத்தியங்கள், சிறப்பு பூஜைகள், ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

கரைப்பதற்கு எடுத்துச் செல்லப்படும் விநாயகர் சிலை


இதையடுத்து, அனைத்து தெரு விநாயகர் சிலைகளும் திட்டக்குடி பகுதிக்கு ஒன்றாக வந்து பெரிய கடை வீதி, வர்த்தகன் தெரு, G.H ரோடு, ரயில்வே பீடர் ரோடு, ராமர் தீர்த்த தெற்கு, மேலத்தெரு நடுத்தெரு, மேலவாசல், வடக்கு வாசல், கீழவாசல், சன்னதி தெரு வழியாக மேளதாளங்கள் முழங்க கரக்காட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்றவையுடன் ஊர்வலமாக வந்து அக்னி தீர்த்தம் கடற்கரைக்கு சென்று அனைத்து விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி