Home /ramanathapuram /

ராமநாதபுரத்தில் விநாயகர் சதுர்த்தி சிலைகள் கரைக்கும் இடங்கள் தெரியுமா?

ராமநாதபுரத்தில் விநாயகர் சதுர்த்தி சிலைகள் கரைக்கும் இடங்கள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஊர்வலம் நடத்தி சிலைகளைக் கரைக்கும் இடங்களை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India
    ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 31ம் தேதி விநாயகா் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. மேலும், விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால், அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்துத் வழிபடவும் அதன் பிறகு விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைப்பது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாகவும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதன் பிறகு, கரைக்கும் இடங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வா்கீஸ் அறிவித்துள்ளார்.

    விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ள இடங்கள்: பரமக்குடி வைகை ஆறு பெருமாள் கோயில் பகுதி, ராமேசுவரம் அக்னி தீா்த்த கடல், மண்டபம் இந்திரா நகா் கடற்கரை, ராமநாதபுரம் நொச்சிச் வயல் ஊருணி, தேவிபட்டணம் நவபாஷணம் கடற்கரை, நரிப்பையூா் கடற்கரை ஆகிய இடங்களில் மட்டுமே
    விநாயகா் சிலைகளைக் கரைக்க வேண்டும்.

    விநாயகா் சதுா்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும். மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Ramanathapuram

    அடுத்த செய்தி